Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹர்திக் பாண்டியா காதலியுடன் மைதானத்திலே படுத்து ரொமன்ஸ்.. அத்துமீறிவிட்டதாக ரசிகர்கள் கண்டனம்

அகமதாபாத்: இந்தியா 2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த நிலையில், ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சர்ச்சையில் சிக்கியுள்ளார். குறிப்பாக கொண்டாட்டத்தின் போது, ஹர்திக்கும், அவருடைய காதலியும் அத்துமீறி நடந்து கொண்டதாக ரசிகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்திய அணியின் கோப்பை வெற்றிக்கு முக்கியப் பங்காற்றிய பாண்டியா, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற கொண்டாட்டங்களின் போது கோப்பையுடன் மீண்டும் மீண்டும் போஸ் கொடுக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியானதையடுத்து, இணையத்தில் பரவலாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

தனது புகழ்பெற்ற போஸை, டி20 உலகக் கோப்பை கோப்பையுடன் பாண்டியா மைதானத்தில் மீண்டும் நிகழ்த்தியபோது துவங்கியது. அந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவின. பாண்டியா கோப்பையை நீண்ட நேரம் தனது கையில் வைத்துக்கொண்டு புகைப்படங்களுக்குப் போஸ் கொடுத்ததாகவும், வைரலான போஸை மைதானத்தில் பலமுறை மீண்டும் நிகழ்த்தியதாகவும் கூறப்படுகிறது.

பதக்கங்கள் வழங்கும் விழா முடிந்த சில நிமிடங்களிலேயே பாண்டியா கோப்பையை கேப்டன் சூர்யகுமார் யாதவிடம் இருந்து பெற்றுக்கொண்டு, மற்ற அணி வீரர்கள் தங்கள் முறைக்காகக் காத்திருந்தபோது, அதனுடன் பல நிமிடங்கள் போஸ் கொடுத்ததாக சில ரசிகர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும், கொண்டாட்டங்களின் போது ஆல்ரவுண்டர் தனது காதலி மஹியேகா ஷர்மாவுடன் கோப்பையுடன் மைதானத்தைச் சுற்றி நடக்கும் காட்சிகளையும் சிலர் சுட்டிக்காட்டினர். கோப்பையை பெறுவதற்காக போடப்பட்ட மேடையில் ஹர்திக்கும், மஹியேகாவும் படுத்து கொண்டு ரொமன்ஸ் செய்து அத்துறீயதாகவும் ரசிகர்கள் புகார் கூறியுள்ளனர்.

மற்ற வீரர்கள் தங்களது மனைவிகளுடன் கன்னியமான முறையில் நடந்து கொண்ட போது ஹ்ர்திக் மட்டும் இவ்வாறு செய்யலாமா எனறு குற்றம்சாட்டியுள்ளனர். கிரிக்கெட் மைதானத்தை உல்லாச மேடையாக ஹர்திக் மாற்றி விட்டார் என்று பலரும் சாடியுள்ளனர். முன்னதாக, ஹர்திக்கை, அவரது காதலி கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தார். இது கூட பரவாயில்லை, ஆனால் மைதானத்தில் இருவரும் படுத்து கொண்டு செய்த விசயம் ஏற்று கொள்ளவே முடியாது என்று ரசிகர்கள் சாடியுள்ளனர்.

விமர்சனங்கள் ஒருபுறமிருக்க, பாண்டியா இத்தொடரில் இந்தியாவின் மிக முக்கியமான வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். அவர் ஒன்பது போட்டிகளில் 217 ரன்கள் எடுத்து, ஒன்பது விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இந்தியாவின் வெற்றிகரமான பயணத்தில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் அவர் முக்கியப் பங்கை வகித்தார்.அகமதாபாத்தில் நடந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, மூன்று டி20 உலகக் கோப்பைகளை வென்ற முதல் அணியாகவும், கோப்பையைத் தக்கவைத்த முதல் அணியாகவும் இந்தியா வரலாற்றுச் சாதனை படைத்தது.

Story first published: Tuesday, March 10, 2026, 21:45 [IST]
Other articles published on Mar 10, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+