கண்டிப்பா இன்னைக்கி பௌலிங் செய்யதான் போறேன்... ஹர்திக் உறுதி
புனே : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3வது ஒருநாள் போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 330 ரன்களை இங்கிலாந்துக்கு இலக்காக அளித்துள்ளது.
இந்த போட்டியில் தற்போது இங்கிலாந்து பேட்டிங் செய்துவரும் நிலையில், தான் கண்டிப்பாக பௌலிங் செய்யவுள்ளதாக ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

வெற்றியை தீர்மானிக்கும் போட்டி
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3வது மற்றும் வெற்றியை தீர்மானிக்கும் இறுதி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 330 ரன்களை இலக்காக இங்கிலாந்துக்கு கொடுத்துள்ளது. அணியின் ஷிகர் தவான், ஹர்திக் பாண்டியா மற்றும் ரிஷப் பந்த் அரைசதங்களை குவித்துள்ளனர்.

64 ரன்களை குவித்த பாண்டியா
போட்டியில் 64 ரன்களை குவித்துள்ள ஹர்திக் பாண்டியா ரிஷப் பந்த்துடன் பார்ட்னர்ஷிப்பை அமைத்து சிறப்பாக விளையாடினார். துவக்க வீரர்கள் பவர்-ப்ளேவில் பார்ட்னர்ஷிப் அமைத்து அவுட்டான நிலையில் இந்திய அணி அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து சற்று தடுமாறியது.

தவறான நேரத்தில் அவுட்
இந்த நிலையில் பாண்டியா மற்றும் பந்த் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். ஆயினும் தொடர்ந்து விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்நிலையில் போட்டியை அடுத்து பேசிய ஹர்திக் பாண்டியா, 360 ரன்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருவரும் தவறான நேரத்தில் ஆட்டமிழந்தது குறித்து சுட்டிக் காட்டினார்.

ஹர்திக் உறுதி
ஆயினும் இந்தியாவிற்கு சிறப்பான ரன்கள் கிடைத்துள்ளதாகவும் பௌலிங்கை சரியான முறையில் போட வேண்டியது முக்கியம் என்றும் அவ்வாறு செய்தால் வெற்றி வசப்படும் என்றும் கூறியுள்ளார். இந்த தொடரில் ஹர்திக் பாண்டியா பௌலிங் செய்யாதது விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில் இன்றைய போட்டியில் தான் பௌலிங் செய்யவுள்ளதாக பாண்டியா உறுதிப்படுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications