For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாத்துட்டே இருங்க.. உலக கோப்பையில் ஹர்திக் பாண்டியா தான் சிம்ம சொப்பனமாக இருப்பார்

லண்டன்:உலக கோப்பை கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா தான் மிக முக்கிய ரோலாக இருப்பார் என்று ஜான்டி ரோட்ஸ் கூறி இருக்கிறார்.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே சிறந்த அணியாக திகழ்ந்து வருகிறது. உலக கோப்பை அணியில் இடம்பிடித்துள்ள அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஐபிஎல் சீசனில் அபாரமாக ஆடி பார்முக்கு வந்துள்ளார்.

Hardik pandya could be crucial factor in world cup says jonty Rhodes

ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இந்த உலக கோப்பையில் மிகப்பெரிய பங்காற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெத் ஓவர்களில் பாண்டியா அதிரடியால் தெறிக்கவிட்டு ஒருசில ஓவர்களில் ஆட்டத்தில் திருப்பு முனையையும் ஏற்படுத்தக்கூடிய வீரர்.

Hardik pandya could be crucial factor in world cup says jonty Rhodes

இந்நிலையில், இந்த உலக கோப்பையில் ஆடும் வீரர்களிலேயே தீராத வேட்கையில் இருப்பது ஹர்திக் பாண்டியா தான் என்று தென்னாப்பிரிக்க முன்னாள் வீரரும் தலை சிறந்த பீல்டருமான ஜான்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார். பாண்டியா குறித்து அவர் கூறியிருப்பதாவது:

சர்ச்சையில் சிக்கி தடை பெற்றிருந்த ஹர்திக் பாண்டியா, அதிலிருந்து எப்படி மீள போகிறார் என்று பெரிய சந்தேகமாக இருந்தது. ஆனால் பாண்டியா ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தி அபாரமாக ஆடினார். ஒரு வீரராக பாண்டியா நிறைய மாறி இருக்கிறார். தற்போது அனைத்து அம்சங்களிலும் திறமையாக விளையாடி வருகிறார் என்றார்.

Story first published: Monday, May 27, 2019, 16:39 [IST]
Other articles published on May 27, 2019
English summary
Hardik pandya could be crucial factor in world cup says jonty Rhodes.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+