Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹர்திக் ஐதராபாத் அணிக்காக ஆட வேண்டியவர்.. பதான் சொன்ன குட்டிக் கதை.. காவ்யா மாறன் அதிர்ச்சி!

மும்பை: ஐபிஎல் தொடரில் நம்பர் 1 ஆல்ரவுண்டராக இருக்கும் ஹர்திக் பாண்டியா, ஐதராபாத் அணியில் விளையாட வேண்டியவர் என்று முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கூறியுள்ளார். 2013ஆம் ஆண்டிலேயே ஹர்திக் பாண்டியா குறித்து விவிஎஸ் லக்‌ஷ்மணிடம் கூறியதாகவும், ஆனால் அவர் செவி கொடுத்து கேட்கவில்லை என்றும் பதான் கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஐதராபாத் அணியை காவ்யா மாறன் நிர்வகிக்க தொடங்கியதில் இருந்து, ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை. கடைசியாக 2016ஆம் ஆண்டில் ஐதராபாத் அணி ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அதன்பின் 2024ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப்போட்டி வரை ஐதராபாத் அணி முன்னேறியது. டி20 கிரிக்கெட்டை புதிய பாணியில் ஐதராபாத் அணி அணுகி வருவது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hardik Pandya could have joined SRH

இந்த நிலையில் மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்டியா, ஐதராபாத் அணிக்காக விளையாட வேண்டியவர் என்று இர்ஃபான் பதான் பேசி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஐதராபாத் அணியின் ஆலோசகராக 2013 முதல் 2021 வரை விவிஎஸ் லக்‌ஷ்மண் செயல்பட்டு வந்தார். 2013ஆம் ஆண்டிலேயே ஹர்திக் பாண்டியாவின் திறமை குறித்து விவிஎஸ் லக்‌ஷ்மணிடம் பதான் கூறி இருக்கிறார்.

ஆனால் ஹர்திக் பாண்டியாவின் திறமை குறித்து வெளியில் அதிகளவில் பேசப்படாததால், அவரை ட்ரையல்ஸ்க்கு கூட விவிஎஸ் லக்‌ஷ்மண் அழைக்கவில்லை. இதன்பின் 2014ஆம் ஆண்டு மெகா ஏலத்தில் ஹர்திக் பாண்டியாவை யாரும் வாங்கவில்லை. இறுதியாக 2015ஆம் ஆண்டு மும்பை அணி ஹர்திக் பாண்டியாவை அடிப்படை தொகையான ரூ.10 லட்சத்திற்கு வாங்கியது.

தற்போது மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட்டு வருகிறார். இதுகுறித்து பதான் பேசுகையில், எனக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கும் இடையில் எந்த மோதலும் இல்லை. பரோடா அணிக்காக ஆடி உச்சத்திற்கு வந்த எந்த வீரர்களையும் நானும், யூசுப் பதானும் கைவிட்டதில்லை. இப்போதும் கூட விவிஎஸ் லக்‌ஷ்மண் ஹர்திக் பாண்டியாவை இழந்தது குறித்து புலம்புவார்,.

ஒருவேளை எனது வார்த்தைகளை கேட்டிருந்தால், ஹர்திக் பாண்டியா சன்ரைசர்ஸ் அணிக்காக ஆடி கொண்டிருப்பார் என்று கூறுவார் என்று தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பல்வேறு இளம் வீரர்களையும் அடையாளம் கண்டு வாய்ப்பு அளித்து வருகிறது. இருந்தாலும் ஹர்திக் பாண்டியாவை வாங்க முடியாமல் கோட்டைவிட்டது தெரிந்தால், நிச்சயம் காவ்யா மாறம் சோகம் அடைவார்.

Story first published: Saturday, August 16, 2025, 14:43 [IST]
Other articles published on Aug 16, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+