Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எனக்கு இப்படி நடக்கலாம்.. மனைவிக்கு சரியான ஆப்பு வைத்த ஹர்திக்! சொத்து குறித்து ஏற்கனவே பக்கா பிளான்

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆஎல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, தற்போது தன்னுடைய மனைவி நட்டாஷாவை விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. செர்பிய நாட்டை சேர்ந்த நட்டாஷா பாலிவுட்டில் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு பார்ட்டி ஒன்றில் நட்டாஷாவை பார்த்த ஹர்திக் பாண்டியா அவருடன் காதலில் விழுந்தார். திருமணத்திற்கு முன்பே நட்டாஷாவை கர்ப்பமாக்கி கடந்த 2020ஆம் ஆண்டு முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

Hardik pandya divorce news update - old video of Hardik reveals he transfeHardik pandya divorce news update - old video of Hardik reveals he transferred his wealth to his mother rred his wealth to his mother

இந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவின் மனைவி நட்டாஷா, அலெக்சாண்டர் என்ற தன்னுடைய சொந்த நாட்டுக்காரர் உடன் தொடர்பில் இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. நட்டாஷாவும் அவருடைய ஆண் நண்பரும் டேட்டிங் செய்த வீடியோக்களும் சமூக வலைத்தளத்தின் மேலாகி வருகிறது. இதனால் நட்டாஷா, ஹர்திக் விவாகரத்து பெறப்போவது உறுதி என்று செய்திகள் வெளியாகி வருகிறது.

இந்த சூழலில் நட்டாஷா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் யாரோ ஒருவர் நிச்சயம் தெருவுக்கு வந்து தான் ஆக வேண்டும் என்று கூறியிருந்தார். இதன் மூலம் விவகாரத்து பெற்று ஹர்திக் பாண்டியாவின் 70 சதவீத சொத்தை ஜீவானம்சமாக வாங்க அவருடைய மனைவி திட்டம் போட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் தான் ஹர்திக் பாண்டியாவின் பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி இருக்கிறது. 2017 ஆம் ஆண்டு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ஹர்திக் பாண்டியா, தமது சொத்தில் பாதியை தன்னுடைய தாயின் பெயருக்கு எழுதி வைத்து விட்டதாக அவர் கூறியிருக்கிறார். தான் வாங்கும் கார், வீடு என அனைத்துமே தன்னுடைய அம்மா பெயர்தான் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும் தன்னுடைய தாயின் பெயரில் எழுதியதன் மூலம் எதிர்காலத்தில் என்னுடைய சொத்தில் பாதியை நான் இழக்க விரும்பவில்லை என்றும் ஹர்திக் பாண்டியா நகைச்சுவையாக கூறி இருக்கிறார். தற்போது அந்த வீடியோ வைலராகி வருகிறது. தமக்கு விவகாரத்து ஏற்படலாம் என்று ஏற்கனவே கணித்த ஹர்திக் பாண்டியா தன்னுடைய தாயின் பெயருக்கு சொத்தை எழுதி இருக்கிறார். இதனால் நட்டாஷா விவாகரத்து பெற்றாலும் ஹர்திக் பாண்டியாவிடமிருந்து பெரிய தொகையை எதுவும் வாங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, May 26, 2024, 8:22 [IST]
Other articles published on May 26, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+