மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு நடப்பாண்டு மிகவும் மோசமான ஒரு ஆண்டாக அமைந்திருக்கிறது. 2023 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரை ஹர்திக் காயம் காரணமாக விலகினார்.
அதன் பிறகு ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் ஹர்திக் பங்கேற்கவில்லை. இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டன் என்று ஹர்திக்கை பலரும் வர்ணித்த நிலையில், அந்தப் பதவி அவருக்கு கிடைக்காமல் போனது. இதன்பிறகு குஜராத் அணியிலிருந்து விலகி மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார்.

இதன் மூலம் ரோகித் சர்மா மும்பை கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது, அவர்கள் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது. இதனால் ஹர்திக் பாண்டியாவை, மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் கேப்டனாக ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் ஹர்திக் பாண்டியா செல்லும் இடம்தான் அவருக்கு எதிராக ரசிகர்கள் எதிர்ப்பு குரல் கொடுத்தனர்.
இது ஹர்திக் பாண்டியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவை கொடுத்தது. இந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவுக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் மிகப்பெரிய இடி ஒன்று விழுந்திருக்கிறது. ஹர்திக் பாண்டியாவுக்கும் அவருடைய மனைவி நட்டாஷாவுக்கும் விவாகரத்து நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது. எனினும் நட்டாஷா ஹர்திக் பாண்டியாவின் 70% சொத்தை ஜீவனாம்சமாக கேட்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த செய்தியை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. அதில் ஹர்திக் பாண்டியாவின் மனைவியான நட்டாஷா தன்னுடைய புதிய காதலன் அலெக்சாண்டர் உடன் மும்பையில் டேட்டிங் செய்த வீடியோ தற்போது வெளியாக இருக்கிறது. அலெக்சாண்டர் செர்பியா நாட்டை சேர்ந்த உடற்பயிற்சி நிபுணர் ஆவார்.
இவர் ஏற்கனவே நடிகை திஷா பட்டானியின் காதலன் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது அவர் ஹர்திக் பாண்டியாவின் மனைவியுடன் சுற்றி வருகிறார். இதற்கு ஹர்திக் பாண்டியா எதிர்ப்பு தெரிவித்ததை எடுத்து இருவரும் விவாகரத்து பெற முடிவு செய்திருக்கிறார்கள். கடந்த 2020 ஆம் ஆண்டு செர்பிய நாட்டை சேர்ந்த நட்டாஷா என்ற பெண்ணை ஹர்திக் பாண்டியா திருமணம் செய்து இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.