Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹர்திக் பாண்டியா மனைவி எடுத்த திடீர் முடிவு.. சமூக வலைத்தளத்தில் நிகழ்ந்த மாற்றம்.. அடுத்தது என்ன?

மும்பை : பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவும் அவருடைய மனைவி நட்டாஷாவும், விவாகரத்து பெற இருப்பதாக செய்திகள் வெளியானது, அவர்களுடைய ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது.

செர்பிய நாட்டைச் சேர்ந்த நட்டாஷா பாலிவூட்டில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்திருக்கிறார். இந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவும் நட்டாஷாவும் ஜனவரி ஒன்றாம் தேதி 2020 ஆம் ஆண்டு இருவரும் நிச்சயம் செய்து கொண்டனர்.

Hardik Pandya divorce updates- Wife Natasha stankovic restores his wedding picture ends speculation

மேலும் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே நடாஷா ஹர்திக் பாண்டியாவால் கர்ப்பமானார். இருவருக்கும் இடையே ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் நட்டாஷாவுக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது. தனது சமூக வலைதள பக்கத்தில் நட்டாஷா, பாண்டியா என்ற துணை பெயரை நீக்கிவிட்டு திருமண புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கி விட்டதாகவும் செய்திகள் வெளியானது.

மேலும் நட்டாஷா தன்னுடைய ஆண் நண்பருடன் தொடர்பில் இருப்பதாகவும் செய்தி வெளியானது. இது குறித்து ஹர்திக் பாண்டியா எந்த ஒரு விஷயத்தையும் வாய் திறக்கவில்லை. ஆனால் நட்டாஷா தன் ஆண் நண்பருடன் டேட்டிங் செல்வது என தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருந்தார். இந்த நிலையில் தான் ஹர்திக் பாண்டியாவின் 70% சொத்தை நட்டாஷா கேட்டு வாங்கப் போகிறார் என்று செய்தி வெளியானது.

இது ரசிகர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது நட்டாஷாவின் நடத்தையில் சில மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது. திடீரென்று தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் நட்டாஷா ஹர்திக் பாண்டியா உடன் திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தை மீண்டும் பகிர்ந்து உள்ளார். அதில் அனைத்து பெருமைகளும் கடவுளுக்கு என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் ஹர்திக் பாண்டியா உடன் இணைந்திருக்கும் பல புகைப்படங்களையும் மீண்டும் அவர் பதிவிட்டிருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. டி20 உலக கோப்பை போட்டியை பார்க்க நட்டாஷா அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

Story first published: Monday, June 3, 2024, 15:14 [IST]
Other articles published on Jun 3, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+