Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நடுக்கடலில் நடந்த நிச்சயதார்த்தம்.. திட்டம் போட்டு தெறிக்கவிட்ட ஹர்திக் பண்டியா - புகைப்படங்கள்!

Recommended Video

Hardik Pandya engaged to Natasha Stankovic in speedboat

துபாய் : இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பண்டியா 2020 துவக்கத்தை திட்டம் போட்டு தெறிக்க விட்டுள்ளார்.

சரியாக 2020 பிறந்த உடன் இரவு 12 மணிக்கு தன் காதலி யார் என்பதை உலகுக்கு சொன்ன அவர், அதே நாளில் நடுக் கடலில், ஸ்பீட்போட்டில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளார்.

இசைக் கச்சேரி

இசைக் கச்சேரி

அதே ஸ்பீட்போட்டில் இசைக் கச்சேரியும் நடந்தது செம ஹைலைட். இந்த செய்தி மற்றும் புகைப்படங்கள் காட்டுத்தீயாக இணையத்தில் பரவி வருகிறது.

பண்டியா காயம்

பண்டியா காயம்

ஹர்திக் பண்டியா காயம் காரணமாக இந்திய அணியில் கடந்த சில மாதங்களாக பங்கேற்கவில்லை. இந்த நிலையில், கிறிஸ்துமஸ் மற்றும் 2020 புத்தாண்டை ஒட்டி துபாய் சென்று இருந்தார் அவர்.

நீண்ட நாள் காதலி

நீண்ட நாள் காதலி

அவர் துபாயில் புத்தாண்டை கொண்டாட மட்டுமே சென்றுள்ளார் என பலரும் நினைத்தனர். ஆனால், 2020 பிறந்த அதே நிமிடத்தில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் நீண்ட நாள் காதலி நடாஷா ஸ்டான்கோவிக்குடன் புகைப்படம் எடுத்து பதிவிட்டார்

அந்த கிசுகிசு

அந்த கிசுகிசு

நடாஷாவை ஹர்திக் பண்டியா நீண்ட காலமாக காதலித்து வருவதாக கிசுகிசு மட்டுமே வந்தது. இருவரும் அதை உறுதி செய்யவில்லை. இந்த நிலையில், பண்டியா அந்த தகவலை உறுதிப்படுத்தவே அந்த புகைப்படத்தை வெளியிட்டார் என கருதப்பட்டது.

ஸ்பீட்போட்டில் நிச்சயதார்த்தம்

ஸ்பீட்போட்டில் நிச்சயதார்த்தம்

ஆனால், அடுத்த சில மணி நேரங்களில் துபாயில் நகரத்தை ஒட்டிய கடல் பகுதியில், ஸ்பீட்போட்டில் அவரது நிச்சயதார்த்தம் நடந்த காட்சிகளை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

கேக் வெட்டி கொண்டாட்டம்

கேக் வெட்டி கொண்டாட்டம்

ஹர்திக் பண்டியா, நடாஷாவுக்கு கையில் மோதிரம் அணிவித்தார். பின் ஜோடியாக கேக் வெட்டி தங்கள் நிச்சயதார்த்தத்தை கொண்டாடினர். அடுத்து இருவரும் சாம்பெயின் அருந்தினர்.

தனியாக நடந்த நிச்சயதார்த்தம்

இந்த நிச்சயதார்த்தத்தில் குடும்ப உறுப்பினர்களோ, நண்பர்களோ கலந்து கொண்டதாக தெரியவில்லை. ஹர்திக் பண்டியா மற்றும் நடாஷா தங்கள் நிச்சயதார்த்தத்தை தாங்களே கொண்டாடி உள்ளனர்.

யார் இந்த நடாஷா ஸ்டான்கோவிக்?

யார் இந்த நடாஷா ஸ்டான்கோவிக்?

நடாஷா ஸ்டான்கோவிக் செர்பிய நாட்டை சேர்ந்தவர். விளம்பரங்களில் நடிக்க இந்தியா வந்தார். பின், பாலிவுட் படங்களில் பாடல்களில் நடனம் ஆடி வருகிறார். இரண்டு தென்னிந்திய படங்களிலும் அவர் பாடல்களில் நடனம் ஆடி உள்ளார்.

அரிமா நம்பி

அரிமா நம்பி

அதில் ஒன்று தமிழ் திரைப்படமான "அரிமா நம்பி". அந்தப் படத்தில் "நானும் உன்னில் பாதி" என்ற பாடலில் அவர் நடனம் ஆடி உள்ளார். எனினும், அவர் தமிழ்நாட்டில் பிரபலமாகவில்லை.

ரசிகர்களின் லைக்குகள்

ரசிகர்களின் லைக்குகள்

ஹர்திக் பண்டியா முதலில் தன் காதலியை அறிமுகம் செய்து பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பதிவிற்கு 12 லட்சத்திற்கும் மேல் லைக்குகள் குவிந்து வியப்பை ஏற்படுத்தியது. அடுத்து அவரது நிச்சயதார்த்த பதிவிற்கும் லைக்குகள் 10 லட்சத்தை தாண்டி குவிந்து வருகிறது.

Story first published: Thursday, January 2, 2020, 10:08 [IST]
Other articles published on Jan 2, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+