
நியூசிலாந்து போட்டிகள்
ஐபிஎல், இங்கிலாந்து சுற்றுப்பயணம், டி20 உலகக்கோப்பை என கடந்த 6 மாதங்களாக இந்திய வீரர்கள் பபுளில் இருந்து வருகின்றனர். எனவே மூத்த வீரர்களான விராட் கோலி, பும்ரா, ஷமி உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளார். இதனால் புதிய வீரர்களை கொண்ட இந்திய அணியை நேற்று பிசிசிஐ அறிவித்தது. அதில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அணி விவரம்
இந்திய டி20 அணி: ரோஹித் ஷர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், இஷான் கிஷன், வெங்கடேஷ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஷர் படேல், அவேஷ் கான், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ்.

ஹர்திக் நீக்கம்
இந்நிலையில் இந்த தொடரில் இருந்து ஹர்திக் பாண்யா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் பந்துவீசாமல் சர்ச்சைக்குள்ளான பாண்ட்யா, டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. பேட்டிங்கில் ஒருசில ரன்களை அடித்தபோதும், பந்துவீச்சில் அதிகபட்சமாக 2 ஓவர்களை தான் வீசினார். அதிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. சிறப்பான பந்துவீச்சை உறுதி செய்யும் வரை ஹர்த்திக்கை அணிக்குள் சேர்க்க பிசிசிஐ விரும்பவில்லை எனத்தெரிகிறது.

வெங்கடேஷ் ஐயர்
ஹர்திக் பாண்ட்யாவுக்கு மாற்றாக இளம் வீரர் வெங்கடேஷ் ஐயர் புதிய ஆல்ரவுண்டராக இணைக்கப்பட்டுள்ளார். இந்தாண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடிய வெங்கடேஷ் ஐயர், தொடக்க வீரராக பேட்டிங்கில் அதிரடி காட்டினார். இதுமட்டுமின்றி பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளதால் இந்திய அணியின் நிரந்தர ஆல்ரவுண்டராக செயல்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.


Click it and Unblock the Notifications











