For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“போதும்பா நான் வீட்டுக்கு போறேன்”.. நியூஸியுடனான டி20 தொடர் வெற்றி.. ஹர்திக் முக்கிய அறிவிப்பு!

நேப்பியர்: நியூசிலாந்து அணியுடனான டி20 போட்டியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யா முக்கியமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்தவுடன் நேரடியாக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

ரோகித் சர்மாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதால் இந்த டி20 தொடருக்கான இந்திய அணியை ஹர்திக் பாண்ட்யா தான் வழிநடத்தி சென்றார். அதில் வெற்றியும் பெற்றுகொடுத்துள்ளார்.

3வது டி20 தொடர்

3வது டி20 தொடர்

முதல் டி20 போட்டி மழையினால் ரத்து செய்யப்பட்ட சூழலில், 2வது டி20 போட்டியில் இந்தியா 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற ஆட்டம் மழையினால் பாதியில் நிறுத்தப்பட்ட போதும் சமனில் முடிவடைந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 19.4 ஓவர்களில் 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

சொதப்பல் பேட்டிங்

சொதப்பல் பேட்டிங்

சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் டாப் ஆர்டர் சொதப்பியது. இஷான் கிஷான் 10, ரிஷப் பண்ட் 11, சூர்யகுமார் யாதவ் 13, ஸ்ரேயாஸ் ஐயர் 0 என அடுத்தடுத்து வெளியேறினர். இதன்பின்னர் வந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 18 பந்துகளில் 30 ரன்களை அடித்து களத்தில் இருந்தார். சரியாக மழை குறுக்கிட்டு பாதிப்பை ஏற்படுத்தியது.

போட்டி முடிவு

போட்டி முடிவு

நீண்ட நேரமாகியும் மழை நிற்காததால் போட்டி ரத்து செய்யப்பட்டது. டிஎல்எஸ் முறைப்படி இந்திய அணி 9 ஓவர்களில் 75 ரன்களை அடித்திருந்தால் சமனில் முடிவடையும். அந்தவகையில் இந்தியாவும் சரியாக 75 ரன்களை அடித்திருந்ததால் போட்டி சமனில் முடிவடைந்தது. இதனால் இந்திய அணி 1 - 0 என தொடரை கைப்பற்றியது.

பாண்ட்யாவின் பேச்சு

பாண்ட்யாவின் பேச்சு

இந்நிலையில் இந்த வெற்றி குறித்து ஹர்திக் பாண்ட்யா நெகிழ்சியுடன் பேசினார். அதில், முழு ஓவர்களையும் ஆடி போட்டியை வெல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அப்படி நடக்கவில்லை. ஆனால் இந்த பிட்ச்-ல் அதிரடியாக ஆடுவதே பாதுகாப்பான ஒன்றாகும். அவர்களின் பவுலிங் அட்டாக் எங்களுக்கு நன்றாக தெரியும். விக்கெட்கள் விழுந்தாலும் அதிரடி காட்ட வேண்டும் என முடிவு செய்தேன்.

வீட்டிற்கு திரும்புகிறேன்

வீட்டிற்கு திரும்புகிறேன்

இந்த தொடருடன் நான் இந்தியாவுக்கு திரும்புகிறேன். வீட்டிற்கு செல்லப்போகிறேன். இனி கிரிக்கெட்டில் இருந்து சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு என் மகனுடன் நேரத்தை செலவளிக்க முடிவெடுத்துள்ளேன் என ஹர்திக் பாண்ட்யா கூறினார். ஒருநாள் தொடரில் அவர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, November 22, 2022, 18:53 [IST]
Other articles published on Nov 22, 2022
English summary
Captain Hardik pandya explanation over Team India victory against New Zealand in t20 series
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+