Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்னும் தேறனும் தம்பி... பிட்னஸ் டெஸ்டில் தோல்வியுற்ற ஹர்திக் பாண்டியா

மும்பை : முதுகுவலி காரணமாக சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவர் பிட்னஸ் டெஸ்டில் தோல்வியடைந்துள்ளார்.

வரும் 24ம் தேதி துவங்கவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இந்தியா 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.

இந்த அணியில் 4 மாதங்களுக்கு பிறகு ஹர்திக் பாண்டியா இடம் பெற்றிருந்த நிலையில், தற்போது அவர் பிட்னஸ் டெஸ்டில் தோல்வியுற்றுள்ளதால், அணியில் மாற்றங்கள் ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முதுகுவலிக்கு அறுவை சிகிச்சை

முதுகுவலிக்கு அறுவை சிகிச்சை

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டராக விளங்கும் ஹர்திக் பாண்டியா, முதுகுவலி காரணமாக கடந்த 4 மாதங்களாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்காமல் உள்ளார்.

இடம்பிடித்த ஹர்திக் பாண்டியா

இடம்பிடித்த ஹர்திக் பாண்டியா

இந்நிலையில் வரும் 24ம் தேதி முதல் துவங்கவுள்ள நியூசிலாந்திற்கு எதிரான சுற்றுப்பயணத்தில் இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா இடம்பெற்றிருந்தார்.

2 டெஸ்ட் போட்டிகள்

2 டெஸ்ட் போட்டிகள்

இந்தியா -நியூசிலாந்து மோதும் இந்த சுற்றுப்பயணத்தில் 3 டி20 போட்டிகள், 3 சர்வதேச ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் மோதவுள்ளன.

பிட்னஸ் டெஸ்ட்டில் தோல்வி

பிட்னஸ் டெஸ்ட்டில் தோல்வி

சமீபத்தில் தனது முதுகுவலிக்காக ஹர்திக் பாண்டியா அறுவை சிகிச்சை மேற்கொண்ட நிலையில், அதிலிருந்து அவர் தேறிவருகிறார். இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இணைய அவர் தேற வேண்டிய பிட்னஸ் டெஸ்ட்டில் அவர் தோல்வி கண்டுள்ளார்.

தேர்வாளர்கள் குழு முடிவு

தேர்வாளர்கள் குழு முடிவு

நியூசிலாந்திற்கு எதிரான இந்த அணியில் 15 வீரர்களுக்கு பதிலாக இந்திய வீரர்கள் 16 அல்லது 17 பேரை தேர்ந்தெடுக்க தேர்வாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு

இந்த அணியில் பல மாற்றங்களை செய்துள்ள இந்திய தேர்வாளர்கள் சூர்யகுமார், சஞ்சு சாம்சன், சுப்மன் கில் போன்றவர்களுக்கு வாய்ப்பளித்துள்ளனர். அவர்களும் பிட்னஸ் டெஸ்டிலும் தேர்வாகியுள்ளனர்.

Story first published: Sunday, January 12, 2020, 11:44 [IST]
Other articles published on Jan 12, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+