ஹர்திக் பாண்டியா தந்தை மாரடைப்பால் மரணம்.. எதிர்பாராத சோகம்!
மும்பை : இந்திய அணி வீரர்கள் ஹர்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியாவின் தந்தை ஹிமான்ஷு பாண்டியா இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
பாண்டியா சகோதரர்களுக்கு எதிர்பாராத சோகமாக அமைந்தது இந்த இழப்பு. சகோதரர்கள் இருவரும் பெரும் சோகத்தில் உள்ளனர்.

ஹர்திக் பாண்டியா தற்போது எந்த கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடவில்லை. க்ருனால் பாண்டியா சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் பரோடா கிரிக்கெட் அணி கேப்டனாக ஆடி வருகிறார். அவர் தற்போது அந்த அணியின் பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறி விட்டதாக அந்த அணி நிர்வாகம் கூறி உள்ளது.
சமீபத்தில் தான் ஹர்திக் பாண்டியாவிற்கு குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது. மகன்கள் இருவரும் இந்திய அணிக்கு ஆடியதை எண்ணி பெருமைப்பட்ட ஹிமான்ஷு பாண்டியா தற்போது அவர்களை விட்டு பிரிந்துள்ளார். ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் பலரும் பாண்டியா சகோதரர்களுக்கு தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications