இது எப்டி இருக்கு... பாண்டியா அடித்த சிக்ஸ்.. ஸ்டேடியத்தை தாண்டி பறந்த பந்து.. மண்டை காய்ந்த கோலி
Recommended Video

பெங்களூரு:கோலி அணிக்கு எதிரான போட்டியில் சிராஜின் பந்தை சிக்சராக மாற்றி ஸ்டேடியத்திற்கு வெளியே அனுப்பிய ஹர்திக் பாண்டியாவின் வீடியோ இணையத்தில் வைரலாக உலா வருகிறது.
ரோகித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், கோலி தலைமையிலான ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டி பெங்களூருவில் நடந்தது. முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 187 ரன்களை குவித்தது.
188 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆர்சிபி அணி 181 ரன்கள் எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மும்பை இந்தியன்ஸ் முதலில் ஆடியபோது ரோகித் சர்மாவும் குயிண்டன் டி காக்கும் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.

மிஸ்சான அரைசதம்
காக் 23 ரன்களில் ஆட்டமிழக்க, 48 ரன்கள் அடித்த ரோகித், அரைசதத்தை எட்டாமல் வெளியேறினார். சூர்யகுமார் யாதவும் யுவராஜ் சிங்கும் சிறப்பாக ஆடினர்.

ஹாட்ரிக் சிக்சர்கள்
சாஹல் வீசிய 14வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து ரசிகர்களை குஷிப்படுத்திய யுவராஜ் ஆட்டமிழந்தார். 15 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 139 ரன்களை குவித்திருந்தது.

3 விக்கெட்டுகள் இழப்பு
ஆனால் 16 மற்றும் 17 ஆகிய ஓவர்களில் 8 ரன்களை மட்டும் எடுத்து, சூர்யகுமார் யாதவ், பொல்லார்டு, குருணல் பாண்டியா ஆகிய மூவரின் விக்கெட்டுகளையும் மும்பை இந்தியன்ஸ் இழந்தது. அதன் பின்னர் அணியின் சரிவை மீட்டார் ஹர்திக் பாண்டியா.
வெளியே சென்ற பந்து
அதிலும் அவர் சிக்சர் அடித்த அந்த பந்து மிகவும் சுவாரசியம். நவ்தீப் சைனி வீசிய 19வது ஓவரில் ஒரு பவுண்டரியும் ஒரு சிக்ஸரும் விளாசுகிறார் பாண்டியா. சிராஜ் வீசிய கடைசி ஓவரையும் விடவில்லை. 2 சிக்சர்களை விளாசினார். அதில் ஒரு சிக்ஸர் ஸ்டேடியத்திற்கு வெளியே சென்றுவிட்டது.

இதோ பார்
யார்க்கர் வீச முயன்று, அது மிஸ்சாக பாண்டியா முடிந்த மட்டிலும் வலுவாக தூக்கி அடித்தார். பந்தோ மைதானத்தை விட்டு பறந்து வெளியே சென்றது. அப்போது தமது சக்தியை காட்டும் விதமாக கையை மடக்கி பாண்டியா காட்ட... ஏக விசில்தான். உயர பறந்த அந்த பந்து... எங்கோ ஸ்டேடியத்தை விட்டு தாண்டி செல்ல... என்ன செய்வது என்று தெரியாமல் கோலி திகைத்து நின்றது தனிக்கதை.


Click it and Unblock the Notifications