Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதெல்லாம் ஒரு பிரச்சினையா... அம்பயரிடம் ஆவேசப்பட்ட ஹர்திக் பாண்ட்யா.. காரணம் ஆஸி, வீரர்கள்- விவரம்

மும்பை: ஆஸ்திரேலிய அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் எதிரணி வீரர்கள் செய்த ஒரு விஷயத்தால் பழைய ஹர்திக் பாண்ட்யாவை மீண்டும் அதே கோபத்துடன் பார்க்க முடிந்தது. அம்பயரிடம் கோபத்துடன் வார்த்தைகள் விட்டதை பார்க்க முடிந்தது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் இன்று தொடங்கியது. முதல் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முழு நேர கேப்டன் ரோகித் சர்மா தனது உறவினரின் திருமணத்திற்கு சென்றுவிட்டதால், முதல் போட்டியில் மட்டும் விலகியுள்ளார். இதனால் ஹர்திக் பாண்ட்யாவிடம் கேப்டன்சி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பாண்ட்யாவின் கேப்டன்சி

பாண்ட்யாவின் கேப்டன்சி

டி20 கிரிக்கெட்டில் கேப்டன்சி பொறுப்பை ஏற்று சிறப்பாக செயல்பட்ட ஹர்திக் பாண்ட்யா, இன்று முதன் முறையாக 50 ஓவர் கேப்டனாக பொறுப்பேற்றார். பாண்ட்யா எப்போதுமே அணி வீரர்கள் எந்தவித அழுத்தத்தையும் உணரக்கூடாது, அவர்களுக்கு தேவையானதை சரியான நேரத்தில் கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார். ஆனால் இன்றைய நாளில் அந்த விஷயத்திற்காக தான் தனது பழைய கோபத்தை வெளியே கொண்டு வந்தார்.

காரணம் என்ன

காரணம் என்ன

ஆட்டத்தின் தொடக்கத்திலேயே விக்கெட் எடுத்த முகமது சிராஜ் அதே வேகத்துடன் 6வது ஓவருக்கு வந்தார். நல்ல நம்பிக்கையுடன் பந்துவீச ஓடி வந்த போது, எதிரணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தடுத்து நிறுத்தினார். சைட் ஸ்கிரீனில் ஏதோ தொந்தரவுகள் இருப்பதாக கூறி பிட்ச்-ஐ விட்டு நகர்ந்து சென்றார். பின்னர் சில விநாடிகளுக்கு பிறகு மீண்டும் வந்தார். இது வழக்கமாக அனைத்து பேட்ஸ்மேன்களுமே செய்யக்கூடிய ஒன்று தான். ஆனால் பாண்ட்யாவின் கோபம் இதற்கு பின் நடந்த சம்பவத்தினால் தான்.

ரியாக்‌ஷன்

ரியாக்‌ஷன்

அதற்கு அடுத்த ஓவரை ஹர்திக் பாண்ட்யா வீச வந்தார். 3வது பந்தை பாண்ட்யா வீசுவதற்கு ஓடி வந்த போது, இந்த முறை மிட்செல் மார்ஷ் தடுத்து நிறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த ஹர்திக் பாண்ட்யா, ஒரு பவுலர் நம்பிக்கையுடன் ஓடி வரும் நேரத்தில் இப்படியா மன ரீதியாக பாதிப்பை ஏற்படுத்துவது என்பதை போல அம்பயரிடம் பேசினார். அம்பயரின் நிதின் மேனனிடம் என்னதான் பிரச்சினை, சீக்கிரம் சரிசெய்ய சொல்லுங்கள் என ஆக்ரோஷமாக பேசினார்.

அட்டகாச பவுலிங்

அட்டகாச பவுலிங்

இதன் பின்னர் மிட்செல் மார்ஷிடமும் பாண்ட்யா ஏதோ ரியாக்‌ஷன் கொடுக்க, அதுகுறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. என்னதான் இந்திய பவுலர்களை சோதித்து பார்த்தாலும், ஆஸ்திரேலியாவால் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட முடியவில்லை. அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து 35.4 ஓவர்களுக்குள் 188 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.

Story first published: Friday, March 17, 2023, 18:59 [IST]
Other articles published on Mar 17, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+