Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீ பார்க்கும் பார்வைக்கொரு நன்றி... நம்மை சேர்த்த கொரோனாவுக்கு ஒரு நன்றி.. அண்ணா.. தம்ப்ரீ!

சூரத் : தன்னுடைய அண்ணன் குருணால் பாண்டியாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை அவருடன் இணைந்து ஹர்திக் பாண்டியா கொண்டாடியுள்ளார்.

Recommended Video

இவங்க தான் உண்மையான வைரஸ்... கொந்தளித்த கிரிக்கெட் வீரர்

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக தன்னுடைய அண்ணனுக்கு ஜீரோ கலோரி கேக் பரிசளித்ததாக குறிப்பிட்டுள்ளார் ஹர்திக். ஆனால் அவர் கேக் இருப்பதாக கற்பனையாக தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு உள்ள இந்த சூழ்நிலையில், தன்னலமற்று செயல்படும் மருத்துவ ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவித்து கடந்த 22ம் தேதி வீடியோ வெளியிட்டிருந்தார் ஹர்திக் பாண்டியா.

29வது பிறந்ததினக் கொண்டாட்டம்

29வது பிறந்ததினக் கொண்டாட்டம்

இந்திய அணியின் ஆல்ரவுண்டராக விளையாடியுள்ள குருணால் பாண்டியா தனது 29வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள இந்த தருணத்தில் வீட்டிலேயே முடங்கியுள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு குடும்பத்தினருடன் செலவழிக்க தற்போது நேரம் அதிகமாக கிடைத்து வருகிறது.

ஹர்திக் பாண்டியா அதிரடி

இந்நிலையில் தன்னுடைய அண்ணனுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார் ஹர்திக் பாண்டியா. இந்த நேரத்தில் தாங்கள் இருவர் மட்டுமே ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு பிறந்தநாளை கொண்டாடியதாக குறிப்பிட்டுள்ள ஹர்திக், தன்னுடைய அண்ணனுக்கு ஜீரோ கலோரி கேக்கை பரிசளித்துள்ளதாக கூறியுள்ளார். அவர் கையில் கேக் இருப்பதாக கற்பனையில் கூறியுள்ளார் ஹர்திக். இதுகுறித்த புகைப்படத்தை தன்னுடைய டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

ஹர்திக் குடும்பத்தினர் பாராட்டு

கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச அளவில் அசாதாரணமான சூழல் நிலவிவரும் நிலையில், இந்த நேரத்தில் தன்னலமற்ற சேவையில் ஈடுபட்டு வரும் மருத்துவ ஊழியர்களுக்கு கடந்த 22ம் தேதி ஹர்திக், அவருடைய அண்ணன் உள்ளிட்டோர் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்து டிவிட்டரில் வீடியோ வெளியிட்டிருந்தனர்.

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்

ஐபிஎல் 2020 சீசன் தள்ளிப் போயுள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள ஆல் ரவுண்டர் குருணால் பாண்டியா, இந்திய அணியிலும் விளையாடி பல்வேறு சிறப்பான ஆட்டங்களை ரசிகர்களுக்கு பரிசளித்தவர். இவருக்கு அணியில் மீண்டும் இடம்கிடைக்குமா என்பதை ஐபிஎல் தீர்மானிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஐபிஎல் தள்ளி போயுள்ளது.

Story first published: Tuesday, March 24, 2020, 11:57 [IST]
Other articles published on Mar 24, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+