Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“என்னிடம் எதுவுமே கூறவில்லை”.. பிசிசிஐ-க்கு எதிராக பூகம்பத்தை கிளப்பிய ஹர்திக் பாண்ட்யா - விவரம்!

மும்பை: ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா விவகாரத்திலும் பிசிசிஐ பொய் கூறியுள்ளதா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா பந்துவீச முடியாமல் விமர்சனங்களை எதிர்கொண்டு வந்தார்.

எனினும் அவர் மீது முழு நம்பிக்கை வைத்த பிசிசிஐ, டி20 உலகக்கோப்பை அணியில் வாய்ப்பு கொடுத்து ஆச்சரியம் கொடுத்தது.

 பிசிசிஐ சொன்ன விளக்கம்

பிசிசிஐ சொன்ன விளக்கம்

இதுகுறித்து பேசியிருந்த தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா, டி20 உலகக் கோப்பையின்போது ஹார்திக் பாண்டியா நிச்சயம் பந்துவீசுவார். அவர் முழு உடற்தகுதியுடன் இருக்கிறார். அவர் பவுலிங் வீச சம்மதித்ததால் தான் அணியில் எடுத்தோம் என்பது போல கூறினார். இதனால் பாண்ட்யாவின் பவுலிங் மீது அதீத எதிர்பார்ப்பு இருந்தது.

ரசிகர்கள் ஏமாற்றம்

ரசிகர்கள் ஏமாற்றம்

ஆனால் முதல் போட்டியிலேயே சுக்கு நூறாக அதனை உடைத்தார். பாகிஸ்தானுக்கு எதிரான முதல் லீக் போட்டியில் ஹர்திக் ஒரு ஓவரை கூட வீசவில்லை. முழு நேர பேட்ஸ்மேனாக செயல்பட்டார். அதன்பின்னர் மற்ற லீக் போட்டிகளிலும் பெரியளவில் பவுலிங் செய்யாததால் அவர் மீது விமர்சனங்கள் குவிந்தன.

 உண்மை உடைத்த பாண்ட்யா

உண்மை உடைத்த பாண்ட்யா

இந்நிலையில், நான் பவுலிங் வீசுவேன் எனக்கூறவில்லை என்றும், முழு நேர பேட்ஸ்மேனாக மட்டுமே உலகக்கோப்பை அணிக்குள் எடுக்கப்பட்டேன் என ஹர்திக் பகிரங்கமாக கூறியுள்ளார். பேட்ஸ்மேனாக முழு நேர நான் தேர்வு செய்யப்பட்ட போதும், அணியின் நிலைமையை பார்த்து பவுலிங் வீச கடும் முயற்சி எடுத்தேன். ஆனால் பெரியளவில் சோபிக்க முடியவில்லை. ரசிகர்கள் தவறாக புரிந்துக்கொண்டனர் எனத்தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் விமர்சனம்

ரசிகர்கள் விமர்சனம்

இதன் மூலம் பிசிசிஐ ஹர்திக் பாண்ட்யா விவகாரத்தில் பொய் கூறியதா என்ற சர்ச்சை எழுந்துள்ளது. வேண்டுமென்றே, ஆல்-ரவுண்டர் இல்லாத அணியை உருவாக்கி லீக் சுற்றுடன் இந்திய அணி வெளியேற காரணமாக அமைந்துவிட்டது. இதனை மறைக்க ஹர்திக்கை பவுலிங் வீசுவார் என பொய் கூறியதாக சேத்தன் சர்மா மீது பிசிசிஐ மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. சமீபத்தில் விராட் கோலி விவகாரம் பூதாரகரமான நிலையில் தற்போது ஹர்திக் பாண்ட்யா விவகாரம் சூடுபிடித்துள்ளது.

Story first published: Tuesday, February 1, 2022, 20:19 [IST]
Other articles published on Feb 1, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+