Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!

அகமதாபாத்: நியூசிலாந்து அணியுடனான 3வது டி20 போட்டிக்கான ப்ளேயிங் 11ல் இன்னும் முடிவெடுக்கப்படாத 2 முக்கிய மாற்றங்கள் உள்ளன. இதுகுறித்து ஹர்திக் பாண்ட்யாவும் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலையில் உள்ளன.

இதனையடுத்து தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள மோதிரா மைதானத்தில் நடைபெறவுள்ளது. வழக்கம் போல இரவு 7 மணிக்கு போட்டி தொடங்கும்.

3வது டி20

3வது டி20

இந்திய அணி சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 12 டி20 தொடர்களை வெற்றிகண்டுள்ளது. தோல்வியே காணவில்லை என்ற பெருமையை காக்க வேண்டிய முணைப்புடன் ஹர்திக் பாண்ட்யா உள்ளார். மறுபுறம் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவிடம் சரணடைந்த நியூசிலாந்து அணி இந்த வாய்பை பயன்படுத்தி பதிலடி கொடுக்க வேண்டும் என ஆர்வத்துடன் களமிறங்குகிறது.

 ப்ளேயிங் 11ல் பிரச்சினை

ப்ளேயிங் 11ல் பிரச்சினை

இந்நிலையில் முக்கியமான இந்த போட்டிக்காக இந்தியாவின் ப்ளேயிங் 11ல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. முதல் விஷயம் ஓப்பனிங்கில் மாற்றம் தேவை என்பது தான். ஒருநாள் போட்டிகளில் கலக்கிய சுப்மன் கில்லால் டி20ல் சோபிக்க முடியவில்லை. 15.2 சராசரியுடன் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளவில்லை. மறுபுறம் பிரித்வி ஷா நல்ல ஃபார்முடன் வாய்ப்புக்காக காத்துள்ளார். கில்லுக்கு ஆதரவுக்கொடுப்பார்களா? அல்லது மாற்றுவார்களா என்ற குழப்பம் உண்டாகியுள்ளது.

 2வது குழப்பம்

2வது குழப்பம்

ப்ளேயிங் 11ல் உள்ள 2வது பிரச்சினை உம்ரான் மாலிக்கா அல்லது யுவேந்திர சாஹலா என்பது தான். 2வது டி20ல் மிகவும் ஸ்லோவான பிட்ச் என்பதால் அதிவேக புயல் உம்ரான் மாலிக் வெளியேற்றப்பட்டு, சாஹல் கொண்டு வரப்பட்டார். ஆனால் இன்றைய போட்டியில் பிட்ச் வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் சம அளவில் சாதகமாக இருக்கும் எனத்தெரிகிறது. இதனால் மீண்டும் சாஹல் வெளியேற்றப்படலாம்.

வழக்கமான ஃபார்முலா

வழக்கமான ஃபார்முலா

இந்தியாவை பொறுத்தவரை கடந்த போட்டியிலேயே 3 வேகப்பந்துவீச்சாளர்கள், 4 ஸ்பின்னர்கள் இருந்தனர். இதில் குறிப்பாக சாஹல் சிறப்பாக செயல்பட்டிருந்தார். எனவே வெற்றி கூட்டணியுடனே செல்லலாம் என முடிவெடுக்கப்படுவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன. இதனால் இன்றைய ப்ளேயிங் 11ல் என்ன ஆகப்போகிறது என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

Story first published: Wednesday, February 1, 2023, 10:20 [IST]
Other articles published on Feb 1, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+