For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“நம்ம பாண்ட்யாவா இது ”.. முதல் டி20ல் விழிப்பிதுங்கிய இங்கிலாந்து.. இந்தியா அபார வெற்றி!

சவுத்தாம்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

இரு அணிகளும் மோதிய இந்த போட்டி சவுத்தாம்டன் ரோஸ்பவுல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணி பேட்டிங்

இந்திய அணி பேட்டிங்

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ஓப்பனிங் வீரர் ரோகித் சர்மா 24 ரன்களுக்கும், இஷான் கிஷான் 8 ரன்களுக்கும் வெளியேறி ஏமாற்றினர். இதன் பின்னர் ஜோடி சேர்ந்த தீபக் ஹூடா - சூர்யகுமார் யாதவ் ஜோடி சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். தீபக் ஹூடா 17 பந்துகளில் 33 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 19 பந்துகளில் 39 ரன்களும் விளாசினர்.

கடைசி நேரத்தில் அதிரடி

கடைசி நேரத்தில் அதிரடி

இந்திய அணி 126 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த சூழலில் களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா கடைசி நேரத்தில் அதிரடி காட்டினார். 33 பந்துகளை சந்தித்த அவர் 6 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் என 51 ரன்களை குவித்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 198 ரன்களை குவித்தது.

இங்கிலாந்து திணறல்

இங்கிலாந்து திணறல்

கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து வீழ்ந்தனர். ஜேசன் ராய் (4), ஜாஸ் பட்லர் (0), டேவிட் மாலன் (21), லிவிங்ஸ்டன் (0) என டாப் ஆர்டர் படுமோசமாக சரிந்தது. இதன் பின்னர் வந்த ஹாரி ப்ரூக் (28) மொயீன் அலி (36) ரன்கள் சேர்க்க அந்த அணி, 148 ரன்களுக்கெல்லாம் ஆல் அவுட்டானது. இதனால் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Recommended Video

IND vs ENG தோல்வி குறித்து Jos Buttler சொன்ன பதில் *Cricket
ஆட்ட நாயகன் விருது

ஆட்ட நாயகன் விருது

இந்த போட்டியில் பேட்டிங்கில் அரைசதம் அடித்து கலக்கிய ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சிலும் தூள் கிளப்பினார். அவர் 4 ஓவர்களை வீசி 33 ரன்களை விட்டுக்கொடுத்த போதும், 4 முக்கிய விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். இதனால் அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

Story first published: Friday, July 8, 2022, 10:10 [IST]
Other articles published on Jul 8, 2022
English summary
Hardik pandya in India vs england 1st t20 ( இந்தியா vs இங்கிலாந்து முதல் டி20 ) இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+