Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எதிரிகளாக மாறும் நண்பர்கள்.. முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி.. சங்கடத்தில் சிக்கிய பாண்ட்யா!

மும்பை: ஆஸ்திரேலிய அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் ஒரு இடத்திற்காக 2 வீரர்கள் அடித்துக்கொண்டிருப்பதால் என்ன முடிவு எடுப்பது என்பது புரியாமல் பாண்ட்யா இருந்து வருகிறார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடந்து முடிந்த சூழலில் அடுத்ததாக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி வரும் மார்ச் 17ம் தேதியன்று நடைபெறவுள்ளது.மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு தொடங்கவுள்ளது.

ஆஸி, தொடர்

ஆஸி, தொடர்

டெஸ்ட் தொடரை போலவே ஒருநாள் தொடரையும் வெற்றியுடன் தொடங்க இந்திய அணி வீரர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். கேப்டன் ரோகித் சர்மா தனிப்பட்ட காரணங்களால் முதல் போட்டியில் இருந்து விலகியுள்ளார். இதனால் ஹர்திக் பாண்ட்யா அணியை வழிநடத்தவுள்ளார். பேட்டிங்கில் சுப்மன் கில், இஷான் கிஷான், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல் என மிகவும் பலமாக உள்ள சூழலில் பவுலிங் துறை தான் குழப்பத்தில் உள்ளது.

பேட்டிங் வரிசை

பேட்டிங் வரிசை

வேகப்பந்துவீச்சில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, முகமது ஷமி, முகமது சிராஜ் என 3 பேர் உறுதியாகிவிட்டனர். இதே போல சுழற்பந்துவீச்சில் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மீண்டும் அணிக்குள் வந்துள்ளார். ஆனால் மற்றொரு ஸ்பின்னராக எந்தவீரரை தேர்வு செய்வது என்பது தான் குழப்பமாக இருந்து வருகிறது. ஏனென்றால் அக்‌ஷர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல் என 4 பேர் உள்ளனர்.

குழப்பத்தில் பாண்ட்யா

குழப்பத்தில் பாண்ட்யா

அக்‌ஷர் பட்டேல், ஜடேஜா போன்ற ஃபிங்கர் ஸ்பின்னர்கள் இருந்தாலும் அணிக்கு வ்ரிஸ்ட் ஸ்பின்னர்கள் நிச்சயம் தேவைப்படுவார்கள். எனவே குல்தீப் யாதவ் - யுவேந்திர சாஹல் ஆகிய இருவரில் இருந்து யாரோ ஒருவருக்கு கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கலாம். ஒருபுறம் இந்தியாவின் முதன்மை ஸ்பின்னராக சாஹலை தான் கோலி, ரோகித் ஆகியோர் பயன்படுத்தி வந்தனர். மற்றொருபுறம் காயத்தில் இருந்து திரும்பி வந்துள்ள குல்தீப் யாதவ் அட்டகாசமான ஃபார்மில் இருக்கிறார். இருவருமே முக்கியமான கட்டங்களில் விக்கெட் எடுக்கும் திறமை உள்ளவர்கள் என்பதால் யாரை பாண்ட்யா தேர்வு செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ப்ளேயிங் 11 கணிப்பு

ப்ளேயிங் 11 கணிப்பு

இஷான் கிஷான், சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ் / யுவேந்திர சாஹல்

Story first published: Thursday, March 16, 2023, 15:06 [IST]
Other articles published on Mar 16, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+