Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பலே பாண்ட்யா.. கிரிக்கெட் ஆடுவதோடு காதலிலும் வீழ்ந்தார்!

ஜாம்ஷெட்பூர்: மாடல் அழகியுடன் காதல் கொண்டுள்ளாராம் இந்திய ஆல் ரவுண்டர் ஹர்டிக் பாண்ட்யா.

உலகக் கோப்பைப் போட்டியில் பிசியாக இருந்து வரும் அவர் தனது காதலிலும் தீவிரமாக இருப்பதாக சொல்கிறார்கள்.

இந்தியாவின் புதிய ஹீரோவாக உருவாகியுள்ள பாண்ட்யா தனது சிறப்பான ஆட்டத்தால் பலரையும் கவர்ந்திழுத்து வருகிறார். 22 வயதான பாண்ட்யாவுக்கு இந்திய அணியில் மிகச் சிறந்த எதிர்காலம் உள்ளதாக பல முன்னாள் வீரர்களும் கணித்துள்ளனர்.

காதல் பாண்ட்யா

காதல் பாண்ட்யா

இந்த நிலையில் தற்போது பாண்ட்யா காதலில் விழுந்துள்ளாராம். கொல்கத்தாவில் வசித்து வரும் லிசா சர்மா என்ற முன்னணி மாடல் அழகியைத்தான் பாண்ட்யா காதலித்து வருகிறாராம். லிசாவுக்கு ஜாம்ஷெட்பூர்தான் சொந்த ஊராம்.

மால்களில் ஜோடியாக

மால்களில் ஜோடியாக

இருவரையும் கொல்கத்தாவில் உள்ள சில மால்களில் பலர் ஜோடியாக பார்த்துள்ளனராம். அதேபோல தாஜ் பெங்கால் ஹோட்டலில் இருவரும் சேர்ந்து டின்னர் சாப்பிட்டதை சிலர் பார்த்துள்ளனராம்.

அமைதி, அடக்கம்

அமைதி, அடக்கம்

பாண்ட்யா குறித்து லிசாவிடம் கேட்டால், ரொம்ப அமைதியானவர், பர்பெக்ட் மனிதர், அவருமையானவர், அடக்கமானவர் என்று பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறார் லிசா. அத்தோடு கூடவே பாரம்பரிய வழக்கப்படி, எனக்கு நல்ல நண்பர் என்று கூறி முடிக்கிறார் லிசா.

பிசி மாடல்

பிசி மாடல்

நாட்டின் பிரபலமான பேஷன் டிசைனர்களான மனீஷ் மல்ஹோத்ரா, சபயசாச்சி முகர்ஜி, வென்டெல் ராட்ரிக்ஸ், அனாமிகா கன்னா ஆகியோரின் படைப்புகளுக்கு பிசியான மாடலாக திகழ்ந்து வருபவர் லிசா.

வாயே திறக்காத பாண்ட்யா

வாயே திறக்காத பாண்ட்யா

இவர் ஆதித்யா சோப்ரா, ரன்வீர் சிங் ஆகியோரின் ரசிகையாம். தனது காதல் குறித்து வெளிப்படையாக சொல்லாமல் இருக்கிறார் லிசா. இவராவது பரவாயில்லை பாண்ட்யா வாயே திறப்பதில்லை.

Story first published: Sunday, March 27, 2016, 12:38 [IST]
Other articles published on Mar 27, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+