Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பலே பாண்டியா...!

மிர்பூர்: ஹர்டிக் பாண்ட்யா ஒரு கேம் சேஞ்சர் என்று கேப்டன் டோணி புகழ்ந்துள்ளார். நேற்று ஆசியாக் கோப்பைப் போட்டியில் வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் பாண்ட்யா விளையாடிய விதத்தையும் அவர் பாராட்டியுள்ளார்.

முதல் பந்திலேயே பெரிய ஷாட் அடித்து அத்தனை பேரின் பாராட்டுக்களையும் அள்ளிக் கொண்டு போய் விட்டார் பாண்ட்யா. கேப்டன் டோணியும் அதைச் சுட்டிக் காட்டி பாராட்டியுள்ளார்.

பாண்ட்யாவின் ஆல் ரவுண்ட் திறமையால் அவர் போட்டியி்ன் முடிவை நிர்ணயிக்கக் கூடிய வீரராக உருவெடுத்துள்ளார் என்றும் டோணி கூறியுள்ளார்.

31 ரன்கள்

31 ரன்கள்

நேற்றைய வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் 18 பந்துகளைச் சந்தித்த பாண்ட்யா 31 ரன்களைக் குவித்தார். மேலும் நான்கு ஓவர்கள் பந்து வீசிய அவர் 23 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டையும் சாய்த்தார்.

சூப்பர்

சூப்பர்

இதுகுறித்து டோணி கூறுகையில், நான்கு ஓவர்கள் பந்து வீசியது நல்லது. அவருக்கு மட்டுமல்லாமல் நமது அணிக்கும் அது பலம் சேர்த்தது. 3 வேகப் பந்து வீச்சாளர்கள், 2 முறையான ஸ்பின்னர்களுடன் நாம் ஆடியது பலமாகவே இருந்தது.

எல்லாமே ஓகே

எல்லாமே ஓகே

நமது அணி அனைத்து வகையிலும் சிறப்பானதாகவே இருக்கிறது. அனைத்துத் துறைகளிலும் நாம் பலமானவர்களாக உள்ளோம். பாண்ட்யா போன்ற ஒருவர் இருப்பது நமக்கு கூடுதல் பலமே.

சுமையைக் குறைப்பார்

சுமையைக் குறைப்பார்

தனக்குக் கிடைக்கும் நேரத்தில் அதிரடியாக ஆடி அவர் ரன் குவிப்பதால் நமது பந்து வீச்சாளர்களுக்கான சுமை சற்று தளர வழி ஏற்படுகிறது. இப்படிப்பட்ட ஆளைத்தான் தேடிக் கொண்டிருந்தோம். அவர் ஒரு கேம் சேஞ்சர்.

சொல்லவே தேவையில்லை

சொல்லவே தேவையில்லை

என்ன செய்ய வேண்டும் என்பதை பாண்ட்யாவுக்குச் சொல்லித் தரத் தேவையில்லை. அவரே புரிந்து கொண்டு செயல்படுகிறார். அதுதான் அவரது ஸ்பெஷாலிட்டி.

திறமைசாலி

திறமைசாலி

இன்னும் சில போட்டிகள் விளையாடும்போது அவருக்கு அனுபவம் கூடும். அதேசமயம், அவர் திறமைசாலியான வீரர். எனவே கற்றுக் கொள்வது அவருக்கு கஷ்டமானதல்ல என்றார் டோணி.

Story first published: Thursday, February 25, 2016, 13:34 [IST]
Other articles published on Feb 25, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+