Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடம்பிடிக்கும் ஹர்திக் பாண்டியா.. அதிர்ச்சியில் தேர்வுக்குழு!! கோபத்தில் பி.சி.சி.ஐ..

பெங்களூரு: இந்திய கிரிக்கெட் அணியின் தலைச் சிறந்த ஆல் ரவுண்டராக வலம் வந்தவர் ஹர்திக் பாண்டியா

தற்போது காயத்தால் அவதிப்பட்டு வரும் ஹர்திக் பாண்டியா பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் முகாமிட்டுள்ளார்

இந்திய கிரிக்கெட் அணியிலும் சரி.. அவரை வளர்த்த மும்பை இந்தியன்ஸ் அணியிலும் சரி.. ஹர்திக் பாண்டியாவுக்கு இடம் இல்லை

வெங்கடேஷ் ஐயர்

வெங்கடேஷ் ஐயர்

தமிழகத்தை பூர்விகமாக கொண்டுள்ள வெங்கடேஷ் ஐயர், விஜய் ஹசாரே கோப்பையில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கலக்கி வருகிறார். இதனால் இந்திய அணியில் புதிய ஆல் ரவுண்டராக வெங்கடேஷ் ஐயர் உருவெடுத்துள்ளார். இதனால் இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவிற்கு இடம் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

தேர்வுக்குழுவின் கெடு

தேர்வுக்குழுவின் கெடு

ஏற்கனவே தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் தம்மை அணியில் சேர்க்க வேண்டாம் என்று தேர்வுக்குழுவினருக்கு ஹர்திக் பாண்டியா கோரிக்கை வைத்தார். இதனை எற்று கொண்ட தேர்வுக்குழு, பிப்ரவரி மாதத்தில் தொடங்க உள்ள மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடருக்குள் தயாராக வேண்டும் என்று கெடு விதித்தது.

ஹர்திக் பிடிவாதம்

ஹர்திக் பிடிவாதம்

இந்த நிலையில், தற்போது மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரிலும் விளையாட மாட்டேன் என்று ஹர்திக் பாண்டியா கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பழைய மாதிரி பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் செயல்பட முடியும் என்று தமக்கு தோன்றினால் மட்டுமே அணிக்கு திரும்புவேன் என்று ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.

Recommended Video

Hardik Pandya Set To Miss India’s Home Series Against West Indies | Oneindia Tamil
அதிர்ச்சி

அதிர்ச்சி

அணியில் இடம் கிடைக்காத போது, ஒரு வாய்ப்பு கொடுத்தால் ஹர்திக் இப்படி கூறிவிட்டாரே என்று தேர்வுக்குழுவினரும் அதிர்ச்சியில் உள்ளனர். ஹர்திக் பாண்டியா பி.சி.சி.ஐ.யின் ஒப்பந்தத்தில் இருக்கும் வீரர் என்பதால், அவர் போட்டியில் பங்கேற்காமல் உள்ளாரே என்று பி.சி.சி.ஐ.யில் உள்ள நிர்வாகிகளும் கடுப்பில் உள்ளனர். ஆனால், ஹர்திக் பாண்டியா ஒரு ஆல் ரவுண்டராக மட்டும் தான் அணிக்கு தேவை என்பதால்,அவரது கூற்றில் நியாயம் உள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Story first published: Tuesday, December 21, 2021, 12:36 [IST]
Other articles published on Dec 21, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+