Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதை கவனீச்சிங்களா..?? ஹர்திக் மீது வைத்த நம்பிக்கை வீண் போகல! கபில் தேவ் இடத்துக்கு வந்த ஹர்திக்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டராக விளங்கி வரும் ஹர்திக் பாண்டியா, தற்போது கபில்தேவின் இடத்தை மெல்ல மெல்ல நிரப்பி வருகிறார்.

அதிரடி ஆட்டக்காரராக இந்திய அணிக்குள் இடம்பெற்ற ஹர்திக் பாண்டியா, தனது வேக பந்துவீச்சால் கலக்கி வந்தார்.

எனினும் காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் தனது இடத்தை இழந்தார்.

ஹர்திக் திட்டம்

ஹர்திக் திட்டம்

இனி ஹர்திக் பாண்டியாவின் கிரிக்கெட் வாழ்க்கை அவ்வளவுதான் என ரசிகர்கள் நினைத்தனர். காயத்திலிருந்து குணமடையும் பணியில் ஈடுபட்டபோது தம்மை இந்திய அணியில் சேர்க்க வேண்டாம் என ஹர்திக் பாண்டியா தேர்வு குழுவுக்கு கடிதமும் எழுதி இருந்தார்.இது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. ஆனால் ஹர்திக் பாண்டியா தான் போட்ட திட்டத்தின்படியே செயல்பட்டு இருக்கிறார் என்பது தற்போது தான் தெரியவந்துள்ளது.

கடிதத்தால் சர்ச்சை

கடிதத்தால் சர்ச்சை

ஹர்திக் பாண்டியா தேர்வு குழுவினருக்கு கடிதம் எழுதிய வேளையில் அவர் விடுமுறையை மாலத்தீவிலோ இல்லை சிங்கப்பூரிலோ கொண்டாடவில்லை. அதற்கு பதில் உடல் தகுதியை மீட்கும் பணியை ஈடுபட்டார். ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்து மீண்டும் அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்பதே ஹர்திக் பாண்டியாவின் திட்டம். அதேபோல் ஹர்திக் பாண்டியா குஜராத் அணிக்காக கேப்டன் பொறுப்பை ஏற்று பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் அசத்தி இந்திய டி20 அணியில் இடம் பெற்றார்.

ரோகித் ஆதரவு

ரோகித் ஆதரவு

ஹர்திக் பாண்டியாவை மூன்றாவது பந்து வீச்சாளராகவும் பேட்ஸ்மன் ஆகவும் விராட் கோலி பயன்படுத்தினார் .ஆனால் அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக பந்துவீச்சில் ஹர்திக் பாண்டியாவால் சரிவர செயல்பட முடியவில்லை. தற்போது ரோகித் சர்மா அவருக்கு ஆதரவை வழங்கி நம்பிக்கை அளித்து வாய்ப்பு கொடுத்தார். இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திய ஹர்திக் பாண்டியா தற்போது பேட்டிங் பந்துவீச்சு என இரண்டிலும் அசத்துகிறார்.

 ஆல்ரவுண்டர்

ஆல்ரவுண்டர்

இங்கிலாந்துக்கு எதிராக முதல் டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கில் அரைசதமும் பந்துவீச்சில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி 33 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இதேபோன்று இரண்டாவது டி20 போட்டிகளும் ஹர்திக் பாண்டியா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தி 29 ரன்கள் விட்டுக் கொடுத்தார். பேட்டிங்கில் 12 ரன்கள் சேர்த்தார். இதேபோன்று நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் ஹர்திக் பாண்டியா 22 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார் .

Recommended Video

Ashwin On ODI: TV-அ Switch Off பண்ணிடுவேன்! | *Cricket | OneIndia Tamil
கபில்தேவ் இடம்

கபில்தேவ் இடம்

பேட்டிங்கில் 29 ரன்கள் சேர்த்தார். அந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டியா 6 ஓவர் வரை வீசினார் . இதனால் விரைவில் ஹர்திக் பாண்டியா மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் மற்றும் பேட்ஸ்மேன் என்ற பொறுப்புக்கு நகர்ந்து விடுவார். இதன் மூலம் இந்திய அணியின் பேலன்ஸ் மேலும் வலுவாகிவிடும். 1983 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு கபில்தேவ் எவ்வாறு இருந்தாரோ அதேபோல் ஹர்திக் பாண்டியா தற்போது இந்திய அணியில் மாறி வருகிறார்.

Story first published: Friday, July 15, 2022, 17:02 [IST]
Other articles published on Jul 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+