Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 தொடரில் இந்தியா வெற்றி கேமை முடித்துக் கொடுத்த பாண்டியா.. மற்றொரு தோனி என ரசிகர்கள் புகழ்ச்சி!

சிட்னி : ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

இதன்மூலம் 2க்கு 0 என்ற கணக்கில் தொடரை வெற்றி கொண்டுள்ளது.

இந்த போட்டியை சிறப்பாக முடித்துக் கொடுத்துள்ளார் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. இறுதி ஓவரில் இவர் அடித்த இரண்டு அதிரடி சிக்ஸ்கள் மூலம் இந்தியா 19.4 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்துள்ளது.

2க்கு 1 என ஆஸ்திரேலியா வெற்றி

2க்கு 1 என ஆஸ்திரேலியா வெற்றி

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரை இரண்டுக்கு 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெற்றி கொண்டுள்ளது. இந்த போட்டியின் முதல் 2 போட்டிகளை ஆஸ்திரேலியா வெற்றி கொண்ட நிலையில் 3வது போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி கொண்டுள்ளது.

2க்கு 0 என இந்தியா வெற்றி

2க்கு 0 என இந்தியா வெற்றி

இதையடுத்து தற்போது டி20 தொடர் கடந்த வெள்ளிக்கிழமை துவங்கி இன்று இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. இந்த இரு போட்டிகளிலும் வெற்றி கொண்டு 2க்கு 0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது இந்திய அணி. அணியின் வீரர்கள் பலர் சிறப்பான பங்களிப்பை தந்துள்ள நிலையில் இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது.

6 விக்கெட்டுகளில் இந்தியா வெற்றி

6 விக்கெட்டுகளில் இந்தியா வெற்றி

முதல் டி20 போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா ஆஸ்திரேலியாவை வெற்றி கொண்டது. இதையடுத்து இன்று ஆடப்பட்ட இரண்டாவது டி20 போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டுள்ளது. இன்றைய போட்டியில் பந்து வீச்சை தேர்வு செய்த இந்திய அணி 19.4 ஓவர்களில் ஆஸ்திரேலியாவின் இலக்கை பூர்த்தி செய்துள்ளது.

14 ரன்களை அடித்து பாண்டியா அதிரடி

14 ரன்களை அடித்து பாண்டியா அதிரடி

இந்த போட்டியின் இறுதி ஓவரில் 14 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, 2, 6, 0 மற்றும் 6 என அதிரடி காட்டி இந்தியாவை வெற்றி பெற செய்துள்ளார். இறுதி ஓவரில் 2 சிக்ஸ்களை விளாசி இன்றைய போட்டியின் ஹீரோவாக மாறியுள்ளார்.

சிறப்பான பினிஷர்கள்

சிறப்பான பினிஷர்கள்

இன்றைய போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயரும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். சமீப காலங்களில் புஜாரா மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் சிறப்பான கேம் பினிஷராக மாறி வருகின்றனர். இது இந்திய அணியின் சிறப்பான மற்றும் ஆரோக்கியமான மாற்றமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக பாண்டியாவின் ஆட்டம் தோனியை நினைவு படுத்துவதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Story first published: Sunday, December 6, 2020, 18:57 [IST]
Other articles published on Dec 6, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+