Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இடியாப்ப சிக்கலில் பண்டியா, ராகுல்.. காவல் நிலைய வழக்கு.. இந்திய அணியில் இடம் கிடைக்குமா?

Recommended Video

பண்டியா, ராகுல் மீது வழக்கு! இந்திய அணியில் இடம் கிடைக்குமா?- வீடியோ

மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பண்டியா மற்றும் கே எல் ராகுல் மீது ஜோத்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹர்திக் பண்டியா மற்றும் கே எல் ராகுல், இருவரும் காபி வித் கரன் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற போது பெண்கள் குறித்து தவறாக பேசியதாக எழுந்த சர்ச்சையில் சிக்கினர். இதற்காக பிசிசிஐ விசாரணை நடத்த உள்ள நிலையில், காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதால் இருவரும் சிக்கலில் சிக்கி உள்ளனர்.

சர்ச்சை பேச்சு

சர்ச்சை பேச்சு

ஹிந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஹர்திக் பண்டியா மற்றும் ராகுல், தங்கள் பேச்சில் சில சர்ச்சைக்குரிய பேச்சுக்களை பேசினர். பண்டியா பெண்கள் குறித்து பேசிய விதம் எதிர்ப்புகளை கிளப்பியது.

இடைக் காலத் தடை

இடைக் காலத் தடை

சமூக வலைதளத்தில் எழுந்த எதிர்ப்பை அடுத்து பிசிசிஐ அவர்களுக்கு இந்த விவகாரம் குறித்த விசாரணை முடியும் வரை இடைக் காலத் தடை விதித்தது. இதனால், இருவரும் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் ஆடும் வாய்ப்பை இழந்தனர்.

பிசிசிஐ விசாரணை

பிசிசிஐ விசாரணை

உச்சநீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் பிசிசிஐ இருப்பதால், இந்த விவகாரத்தை விசாரிக்க ஒருவரை நியமிக்குமாறு பிசிசிஐ உச்சநீதிமன்றத்தை அணுகியது பிசிசிஐ. இதற்கிடையே, முன்னாள் வீரர்கள் பலர் இடைக் காலத் தடையை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இடைக்கால தடை நீக்கம்

இடைக்கால தடை நீக்கம்

மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவு மற்றும் பிற விசாரணை நடைமுறைகள் முடிய நீண்ட காலம் ஆகும் என்பதால், இடை நீக்கத்தை ரத்து செய்தது பிசிசிஐ. இதனால், ஹர்திக் பண்டியா இந்திய அணியில் இணைந்தார். ராகுல் இந்தியா ஏ அணியில் சேர்ந்து ஆடி வருகிறார்.

புதிய வழக்கு

புதிய வழக்கு

இருவரும் ஓரளவு சிக்கலில் இருந்து தப்பினார்கள் என எண்ணிய வேளையில், ஜோத்பூர் காவல்நிலையம் ஒன்றில் இவர்களின் சர்ச்சை பேச்சுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யபட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

பாதிப்பு ஏற்படுமா?

பாதிப்பு ஏற்படுமா?

இந்நிலையில், பிசிசிஐ விசாரணை, காவல்துறை வழக்கு என இடியாப்ப சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளனர் பண்டியா மற்றும் ராகுல். ஹர்திக் பண்டியா உலகக்கோப்பை அணியில் இடம் பெற அதிக வாய்ப்புண்டு என கூறி வரும் நிலையில், இந்த புதிய வழக்கால் பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Wednesday, February 6, 2019, 17:55 [IST]
Other articles published on Feb 6, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+