Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியில் மீண்டும் ஹர்திக் பாண்ட்யா.. அதீத நம்பிக்கை வைக்கும் பிசிசிஐ.. காரணம் என்ன?

மும்பை: இந்திய அணியில் மீண்டும் ஹர்திக் பாண்ட்யா சேர்க்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தோல்வியை சந்தித்த இந்திய அணி அடுத்ததாக சொந்த மண்ணில் விளையாடவுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மேற்கிந்திய தீவுகள் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

இந்திய அணி

இந்திய அணி

இதற்கான இந்திய அணி தேர்வு தான் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த கேப்டன் ரோகித் சர்மா, இந்த தொடரில் கம்பேக் கொடுக்கிறார். இதே போல ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் குணமடைந்துவிட்டதாக தெரிகிறது. இதனால் தென்னாப்பிரிக்கா தொடரில் சரியாக செயல்படாத வீரர்களை நீக்கிவிட்டு, மீண்டும் பழைய வீரர்கள் சேர்க்கப்படவிருக்கின்றனர்.

 மீண்டும் பாண்ட்யா

மீண்டும் பாண்ட்யா

இந்நிலையில் இந்த பட்டியலில் இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவின் பெயரும் இடம்பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காயம் காரணமாக சரியாக பவுலிங் வீசாமல் இருந்த பாண்ட்யா, பேட்டிங்கிலும் பெரிதாக சோபிக்கவில்லை. எனவே அவரை அணியில் இருந்து வெளியேற்றியது பிசிசிஐ. கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தீவிர பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில் அவர் முழு உடற்தகுதி பெற்றுவிட்டதாக தெரிகிறது.

 என்ன காரணம்

என்ன காரணம்

ஐபிஎல் தொடரில் அகமதாபாத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள பாண்ட்யா, தான் இனி முழு ஆல்ரவுண்டராக செயல்பட தயாராகிவிட்டேன், ஐபிஎல் 2022ல் எனது பவுலிங்கை பார்ப்பீர்கள் எனக் கூறினார். மேலும் தனக்கு இனி எந்தவித பிரச்சினையும் கிடையாது எனவும் நம்பிக்கையுடன் கூறியிருந்தார். அவரின் செயல்பாடுகளை பார்த்தே அகமதாபாத் அணி ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக பாண்ட்யாவை கேப்டனாக நியமித்தது.

பிசிசிஐ திட்டம்

பிசிசிஐ திட்டம்

எனவே ஐபிஎல் தொடருக்கு முன்னதாகவே ஹர்திக் பாண்ட்யாவை பரிசோதித்து பார்த்துவிட பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. ஏனென்றால் தென்னாப்பிரிக்க தொடரிலேயே நல்ல வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் இல்லாமல் இந்திய அணி திணறியது. எனவே பாண்ட்யாவை வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டிகளில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. ஒருவேளை அவர் சொதப்பினால் வெங்கடேஷ் ஐயருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.

Recommended Video

India ODI, T20I Squads vs WI: Rohit to lead, Kuldeep, Bishnoi get call | OneIndia Tamil
இன்று இறுதி முடிவு

இன்று இறுதி முடிவு

இந்திய அணியின் தேர்வுகள் குறித்த இறுதி முடிவு இன்று மாலை எடுக்கப்படவுள்ளது. கேப்டன் ரோகித் சர்மாவும் இதில் கலந்துக்கொண்டு தனக்கு தேவையான வீரர்களை கேட்டுப்பெறுவார் எனத் தெரிகிறது,. இதில் அவர் முழுமையாக நம்பிக்கை வைத்திருக்கும் ஹர்திக் பாண்ட்யாவுக்கு வாய்ப்பு பெற்று கொடுக்கலாம்.

Story first published: Wednesday, January 26, 2022, 16:39 [IST]
Other articles published on Jan 26, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+