Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இனி வேற வழியே இல்ல.. இந்திய அணியில் 3 பேருக்கு ஆப்பு.. இலங்கையுடனான 3வது டி20..ஹர்திக் அதிரடி முடிவு

ராஜ்கோட்: இலங்கை அணியுடனான 3வது டி20 போட்டிக்காக கேப்டன் ஹர்திக் பாண்ட்யா சில முக்கிய முடிவுகளுடன் இந்திய ப்ளேயிங் 11-ஐ உருவாக்கியுள்ளார். இதற்கான ஆலோசனைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற சூழலில் 2வது போட்டியில் இலங்கை வெற்றி கண்டது.

எனவே வெற்றியாளரை தீர்மானிக்கப்போகும் கடைசி டி20 போட்டி ஜனவரி 8ம் தேதியன்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தாண்டின் முதல் தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் இரு அணிகளும் களமிறங்குகின்றன.

3வது டி20

3வது டி20

இந்திய அணியை பொறுத்தவரையில் கடந்த 2 போட்டிகளிலுமே ஹர்திக் பாண்ட்யா தேர்வு முறைகளிலும், ஆட்ட முடிவுகளிலும் பெரிய ரிஸ்குகளை எடுத்து வந்தார். முதல் போட்டியில் அக்‌ஷரை கடைசி ஓவரில் கொண்டு வந்தது, 2வது போட்டியில் டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்தது என சிக்கல்களை சந்தித்தார். ஆனால் அது தற்போது வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நிலைக்கு கொண்டு வந்துள்ளது.

ப்ளேயிங் 11 மாற்றங்கள்

ப்ளேயிங் 11 மாற்றங்கள்

இந்நிலையில் இதற்காக பலமான அணியை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். அதாவது ஓப்பனிங்கை பொறுத்தவரையில் சுப்மன் கில் தனக்கு கிடைத்த 2 வாய்ப்பையுமே சரியாக பயன்படுத்தவில்லை. எனவே பெஞ்சில் வாய்ப்புக்காக காத்திருக்கும் ருதுராஜ் கெயிக்வாட் 3வது போட்டிக்கான இந்திய ப்ளேயிங் 11ல் சேர்க்கப்படவுள்ளதாக தெரிகிறது. இஷான் கிஷான் மீண்டும் வாய்ப்பு பெறலாம்.

பலமான மிடில் ஆர்டர்

பலமான மிடில் ஆர்டர்

மிடில் ஆர்டரை பொறுத்தவரையில் ராகுல் திரிபாதி முதல் வாய்ப்பில் சொதப்பி இருந்தாலும், அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைத்துள்ளன. மற்றபடி ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹுடா என படு பலமான மிடில் ஆர்டர் உள்ளது. அக்‌ஷர் பட்டேல் தற்போது மிடில் ஆர்டரில் களமிறங்கி கூட விளையாடுவதால் காம்பினேஷனை கூட மாற்றிக்கொள்ளலாம்.

பவுலிங்கில் மாற்றம்

பவுலிங்கில் மாற்றம்

பவுலிங்கில் தான் பெரிய மாற்றங்களே உள்ளன. அதாவது, காயத்தில் இருந்து குணமடைந்து வந்த அர்ஷ்தீப் சிங் 5 நோ பால்களை போட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அவர் இன்னும் பழைய ஃபார்முக்கு திரும்பாததால் அவர் நீக்கப்படலாம். அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தரை அணிக்குள் கொண்டு வருவார்கள் எ

காரணம் என்ன

காரணம் என்ன

ராஜ்கோட் மைதானத்தில் மிகவும் வறண்ட பிட்ச்-ஆக இருக்கும் என்பதால் சுழலுக்கு சாதகமாக இருக்கும். எனவே அர்ஷ்தீப்பை நீக்கிவிட்டு வாஷிங்டன் சுந்தரை கொண்டு வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் அவர் லோயர் ஆர்டரில் நல்ல பேட்ஸ்மேனாகவும் இருப்பார். இவருக்கு உறுதுணையாக யுவேந்திர சாஹல், அக்‌ஷர் பட்டேல் செயல்படலாம்.

குல்தீப் யாதவ் பெஞ்சில் இருப்பதால், சாஹலுக்கு மாற்றாக அவருக்கு வாய்ப்பு கொடுக்கவும் வாய்ப்புள்ளது. வேகப்பந்துவீச்சை பொறுத்தவரையில் உம்ரான் மாலிக், ஷிவம் மாவின் அட்டகாச ஃபார்மில் இருக்கின்றனர்.

ப்ளேயிங் 11 கணிப்பு

ப்ளேயிங் 11 கணிப்பு

இஷான் கிஷான், ருதுராஜ் கெயிக்வாட், ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, தீபக் ஹூடா, அக்‌ஷர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், உம்ரான் மாலிக், ஷிவம் தூபே, யுவேந்திர சாஹல்

Story first published: Friday, January 6, 2023, 17:35 [IST]
Other articles published on Jan 6, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+