Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அட இதை எதிர்பார்க்கலையே.. 3வது டி20ல் இந்தியாவுக்கு தானாக வந்த அதிர்ஷடம்.. முதலில் பவுலிங்!

நேப்பியர்: நியூசிலாந்து அணியுடனான 3வது டி20 போட்டியில் இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா எடுத்துள்ள முடிவு ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 1 - 0 என முன்னிலை வகிக்கிறது. தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டி இன்று நேப்பியர் நகரத்தில் தொடங்கியுள்ளது.

இந்த போட்டியும் தொடங்குவதற்கு முன்னதாகவே மழை குறுக்கிட்டது. எனினும் சிறிது நேரத்திலேயே மழை பொழிவு நின்றதால் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

3வது டி20 ஆட்டம்

3வது டி20 ஆட்டம்

இந்திய அணியை பொறுத்தவரை டாப் ஆர்டர் கடந்த போட்டியில் சொதப்பியது. குறிப்பாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் 6 ரன்களுக்கு நடையை கட்டினார். எனவே இந்த முறையாவது சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு தருவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது. பண்ட்-க்கு கடைசியாக ஒரு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

ஒரே ஒரு மாற்றம்

ஒரே ஒரு மாற்றம்

அணியின் ப்ளேயிங் 11ல் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரே ஒரு மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக கூடுதல் வேகப்பந்துவீச்சாளராக ஹர்ஷல் பட்டேல் சேர்க்கப்பட்டுள்ளார். உம்ரான் மாலிக்கிற்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பிட்ச்- ஐ பொறுத்தவரையில் மெக்லீன் பார்க் மைதானத்தில் ஸ்கொயர் திசையில் ( இருபுறம் ) பவுண்டரி எல்லைகள் மிகவும் அருகில் இருக்கும். ஸ்ட்ரைட்டில் தான் அதிக இருக்கும். எனவே பேட்டிங்கிற்கு ஏற்ற நல்ல களமாகும்.

ஒரு ட்விஸ்ட்

ஒரு ட்விஸ்ட்

ஆனால் நீண்ட நேரம் மழை பொழிந்துள்ளதால் பிட்ச் நன்கு இறுகி உள்ளது. புற்களும் ஓரளவிற்கு உள்ளதால் சுழற்பந்துவீச்சாளர்கள் சாதிக்கலாம். எனவே இங்கு 2வது பேட்டிங் செய்யும் போது அணிகள் ஒரளவிற்கு சுலபமாக ரன் அடிக்கலாம்.ஆனால் இதனை யோசிக்காத நியூசிலாந்து அணி, பேட்டிங் எடுத்தால் வெற்றி காணலாம் என்ற ரெக்கார்டை நம்பி களமிறங்கியுள்ளது.

 இந்திய ப்ளேயிங் 11

இந்திய ப்ளேயிங் 11

இஷான் கிஷான், ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, தீபக் ஹூடா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், யுவேந்திர சாஹல்

Story first published: Tuesday, November 22, 2022, 12:31 [IST]
Other articles published on Nov 22, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+