Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணிக்கு கேப்டனாகும் ஹர்திக் பாண்டியா.. ஐபிஎல் தொடரால் கிடைத்த லக்.. முழு விவரம் இதோ

மும்பை: இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக பிசிசிஐ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய அணியில் இடம் கிடைக்காமல், உடல் தகுதியை காரணம் காட்டிய பிசிசிஐ தற்போது, கேப்டன் பதவிக்கு ஹர்திக் பெயர் பரிசீலினை செய்வது உண்மையிலேயே கெத்தான விசயம்.

ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு சென்று அசத்தியிருந்தது. குஜராத்துக்கு பெருமை சேர்த்தால் தன்னால் உயர முடியாதா என்ன?

Hardik Pandya may named as stand in captain for team india

ஹர்திக் பாண்டியா குஜராத் அணிக்கு கேப்டனாக பதவியேற்ற போது, அவருடைய சிறு வயது பயிற்சியாளரே, ஹர்திக்கிற்கு கேப்டன் பதவி வழங்கி இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அவரால் இந்த பணியை செய்ய மடியுமா என தெரியவில்லை என கூறினார். ஆனால் ஹர்திக்கோ தனது கேப்டன்ஷி திறமை மூலம் அணியை செம்மையாக கட்டமைத்துள்ளார்.

மேலும் வீரர்களுக்கு துணை நிற்பது, தோற்றாலும், ஜெய்த்தாலும் அணியாக செயல்படுவோம் என உலகம் அறிய செய்தது என கேப்டனுக்கு உரிய அத்தனை விதத்திலும் ஜொலித்தார் பாண்டியா. இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 5 டி20 போட்டி தொடர், அயர்லாந்துக்கு எதிராக டி20 போட்டி ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளது.

இதில் சீனியர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதால் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹர்திக் பாண்டியாவுக்கு போட்டியாக ஷிகர் தவானின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இருப்பினும் முழுக்க முழுக்க இளம் வீரர்களை அணியில் தேர்வு செய்யப்பட உள்ளதால் , ஹர்திக் தான் இந்த பந்தயத்தில் வெல்வார்.

Story first published: Saturday, May 14, 2022, 20:10 [IST]
Other articles published on May 14, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+