Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தங்கத்தை தகரம்னு நினைக்காதீங்க..! ரோகித் சர்மாவுக்கு தூதுவிட்ட ஹர்திக் பாண்டியா.. விவரம் என்ன ?

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்று பல விசயங்களை வெளிப்படையாக உணர்த்துவது போல் அமைந்துள்ளது.

Recommended Video

Hardik Pandya அதிரடி பேட்டி ! கேப்டன் Rohit Sharma-க்கு தூது *Cricket

ஹர்திக் பாண்டியா, இந்திய அணியின் ஆல்ரவுண்டராக தனது பயணத்தை தொடங்கினார். பின்னர், காயத்தால் அவதிப்பட்டு அணியில் தனது இடத்தை இழந்தார்.

எனினும் அறுவை சிகிச்சை செய்து, தனது முழு உடல் தகுதியை எட்டிய ஹர்திக் பாண்டியா, ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியில் இடத்தை பிடித்தார்.

3வது வேகப்பந்துவீச்சாளர்

3வது வேகப்பந்துவீச்சாளர்

அயர்லாந்து தொடரில் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா தற்போது இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு காலத்தில் தோனி ஹர்திக் பாண்டியாவை 3வது வேகப்பந்துவீச்சாளராக பயன்படுத்தி வந்தார். இதன் மூலம் பேட்டிங்கை பலப்படுத்த முடிந்தது.

19 ரன்கள்

19 ரன்கள்

ஆனால் ஹர்திக் பாண்டியாவை தற்போது பேட்ஸ்மேனாக மட்டும் தான் ரோகித் சர்மா பெரிய அளவில் பயன்படுத்துகிறார். கூடுதலாக 4வது வேகப்பந்துவீச்சாளராக அணியில் நீடிக்கும் பாண்டியாவுக்கு 2 ஓவர்கள் தான் ரோகித் வழங்கினார். இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 3வத டி20 போட்டியில் ஹர்திக் 4 ஓவர்களை வீசி 19 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

4 ஓவர்கள்

4 ஓவர்கள்

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஹர்திக் பாண்டியா, இதற்கு முன்னால் 4 ஓவர் வீசும் பந்துவீச்சாளராக தான் இருந்தேன். தற்போது யாராவது சரியாக பந்துவீசவில்லை என்றால், அவர்களுக்கு பதில் நான் வீசுகிறேன்.ஆனால் என்னால் உறுதியாக சொல்ல முடியும். என்னால் 4 ஓவர்கள் வீச முடியும்.

தூதுவிட்ட ஹர்திக்

தூதுவிட்ட ஹர்திக்

என்னை கேப்டன்கள் 3வது வேகப்பந்துவீச்சாளராகவோ அல்லது 4வது வேகப்பந்துவீச்சாளராகவோ பயன்படுத்தி கொள்ளலாம். அதே போல் பேட்டிங்கிலும் என்னால் முழு பங்களிப்பையும் தர முடியும். முழு ஓவர்களையும் வீச வேண்டும் என்பதற்காக தான் கடந்த சில காலமாக கிரிக்கெட் போட்டியிலிருந்து ஒதுங்கி இருந்தேன். நான் 4 ஓவரை வீசினால், அது கேப்டனுக்கு தான் உத்வேகத்தை தரும்.அணியின் சமநிலை சிறப்பாக இருக்கும்.

Story first published: Thursday, August 4, 2022, 21:45 [IST]
Other articles published on Aug 4, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+