Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தப்பான ஆளை பிடித்த நடாஷா! திடீர் நிச்சயம்..ரகசிய திருமணம்!! அப்பாவாகப் போகும் பாண்டியாவின் காதல் கதை

மும்பை : ஹர்திக் பாண்டியா சில நாட்கள் முன்பு தான் அப்பாவாகப் போகும் மகிழ்ச்சி செய்தியை பகிர்ந்து கொண்டார்.

செர்பிய நடிகையான நடாஷா ஸ்டான்கோவிக்கை காதலித்து, நிச்சயதார்த்தம் செய்து கொண்ட அவர், இந்த லாக்டவுனில் திடீர் திருமணமும் செய்து கொண்டார்.

அவரது காதல் கதை எங்கே தொடங்கியது என்பது பற்றி அவரே ஒரு பேட்டியில் சமீபத்தில் கூறி உள்ளார்.

காதல் கிசுகிசு

காதல் கிசுகிசு

ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் இருப்பவர்களிலேயே ரொம்ப மாடர்னான வீரர். ஆல் - ரவுண்டரான அவர் குறித்து அவ்வப்போது காதல் கிசுகிசு எழுந்து வந்தது. இந்த நிலையில், துபாய்க்கு தன் காதலி நடாஷா ஸ்டான்கோவிக்குடன் இந்த ஆண்டு ஜனவரியில் சுற்றுலா சென்றார்.

நடுப் படகில் நிச்சயம்

நடுப் படகில் நிச்சயம்

அப்போது யாருக்கும் சொல்லாமல், திடீரென கடலில், நடுப் படகில் வைத்து அவருக்கு மோதிரம் அணிவித்து அவரே நிச்சயம் செய்து கொண்டார். அந்த விஷயம் அவரது பெற்றோருக்கு கூட தெரியாது என்பது தான் இதில் வியப்பான விஷயம்.

திடீர் திருமணம்

திடீர் திருமணம்

இந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக லாக்டவுனில் தன் வருங்கால மனைவியுடன் இருந்த ஹர்திக் பாண்டியா , திடீரென வீட்டிலேயே அவரை எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தகவலும் முன்னதாக யாருக்கும் தெரியாது.

திருமணம் செய்த புகைப்படம்

திருமணம் செய்த புகைப்படம்

சில நாட்கள் முன்பு இன்ஸ்டாகிராமில் தான் தந்தையாக இருக்கும் நல்ல செய்தியை புகைப்படத்துடன் அவர் பகிர்ந்தார். அதில் ஒரு புகைப்படத்தில் தான் அவர்கள் திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது. இந்த தகவல்கள் அவருடன் ஆடிய சக கிரிக்கெட் வீரர்களுக்கே ஆச்சரியமாக அமைந்தது.

காதல் கதை

காதல் கதை

எல்லாமே சொல்லாமல், கொள்ளாமல் செய்த ஹர்திக் பாண்டியா சமீபத்தில் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளேவுக்கு அளித்த பேட்டியில் தன் காதல் கதையைப் பற்றி பேசி உள்ளார். அதில் நடாஷாவை தான் எப்படி சந்தித்தேன் என்பது பற்றி அவர் கூறி உள்ளார்.

ஒருவரை ஒருவர் தெரியாது

ஒருவரை ஒருவர் தெரியாது

பாண்டியா கூறுகையில், முதல் சந்திப்பில் இருவருக்கும் ஒருவரை ஒருவர் தெரியாது என்றார். கிரிக்கெட் வீரரான அவரை நடாஷாவுக்கு யாரென்றே தெரியாத நிலையில், பேசியதன் மூலம் அறிமுகம் ஆனதாக கூறினார். முதலில் பேசிக் கொண்டதும் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் தான்.

வட்டமான தொப்பி

வட்டமான தொப்பி

நடாஷா வட்டமான தொப்பி அணிந்த ஒருவரை ஹர்திக் பாண்டியா இருந்த அதே இடத்தில் முன்பு பார்த்துள்ளார். இந்த நிலையில், அதே இடத்தில் பாண்டியா தொப்பி, செயின், வாட்ச் அணிந்து கொண்டிருந்தார். அப்போது அவர் தான் இவர் என தவறாக நினைத்து பேசி உள்ளார் நடாஷா.

பெற்றோருக்கு கூடத் தெரியாது

பெற்றோருக்கு கூடத் தெரியாது

பின்னர் இருவரும் பேசி, ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து கொண்டனர். அதன் பின் டேட்டிங் சென்றுள்ளனர். பின்னர் டிசம்பர் 31 அன்று நடாஷாவை துபாயில் நிச்சயம் செய்து கொண்டார் பாண்டியா . அவர் நிச்சயம் செய்து கொள்ள இருந்தது அவரது பெற்றோருக்கு கூடத் தெரியாது எனவும் கூறினார்.

அண்ணன் ஆதரவு

அண்ணன் ஆதரவு

நிச்சயம் செய்ய இருந்த இரண்டு நாட்களுக்கு முன் தன் சகோதரர் க்ருனால் பாண்டியாவிடம், தான் காதலித்த பெண்ணை நிச்சயம் செய்து கொள்ள விஷயத்தை கூறி உள்ளார். அண்ணன் ஆதரவு அளிக்க, தம்பி நடாஷாவை கைப் பிடித்தார்.

Story first published: Thursday, June 4, 2020, 23:09 [IST]
Other articles published on Jun 4, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+