
ஹர்திக் பேச்சு
இந்நிலையில் இப்போட்டிக்கான செய்தியாளர் சந்திப்பில் ரிஷப் பண்ட்-ன் உடல்நிலை குறித்து பேசியுள்ளார் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா. அதில், நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட்-க்கு விபத்து ஏற்பட்டது துரதிஷ்டவசமான ஒன்று. அவர் அணியில் மிகவும் முக்கியமான வீரர், ஆனால் சூழல்நிலை என்னவென்பது பற்றி அனைவருக்குமே தெரியும். எங்களின் உலகக்கோப்பை திட்டத்தில் பண்ட் முக்கிய பங்கு வகித்தார். ஆனால் தற்போது அனைத்தும் சொதப்பியுள்ளது

பலருக்கு வாய்ப்பு
ரிஷப் பண்ட் அணியில் இல்லாததால் பல்வேறு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஆனால் பண்ட்-ஐ போன்ற வீரர் அணியில் இருந்தால், அங்கு நடக்கும் மேஜிக்கே வித்தியாசமாக இருக்கும். எனினும் அவருக்கு மாற்று வீரர் யார் என்பதை கண்டறிவோம்.
ஒரு அணியாக அவர் விரைவில் குணமடைய வேண்டும் என வாழ்த்துகிறோம். எங்களின் அன்பும், பிரார்த்தனையும் வேகமாக குணமடைய உதவும்.

மருத்துவ ரிப்போர்ட்
ரிஷப் பண்ட் தற்போது டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார். அவருக்கு ஸ்கேன் எடுத்து பார்த்ததில் எந்தவித எலும்பு முறிவும் இல்லை, உடல் முழுவதும் காயங்கள் மற்றும் சிராய்ப்புகள் தான் உள்ளது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனவே இன்னும் 2 - 3 நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார் எனத்தெரிகிறது.

எப்போது குணமாவார்
ரிஷப் பண்ட்-ன் காயங்கள் ஆபத்தானவை இல்லையென்றாலும் அவர் முன்பை போல முழு உடற்தகுதியை பெற குறைந்தது 5 - 6 மாதங்கள் வரை ஆகும் எனத்தெரிகிறது. இதுமட்டுமல்லாமல் இந்திய அணியில் யோ யோ டெஸ்ட் மற்றும் டெக்ஸா பரிசோதனைகளில் தேர்ச்சி பெற்ற பின்னரே மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











