
ஹர்திக் காயம்
ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 போட்டி என அனைத்து போட்டிகளிலும் விளையாடினார். கபில்தேவுக்கு பிறகு இந்தியா கண்டெடுத்த சிறந்த ஆல்ரவுண்டர் என்ற பெயரை பெற்றார். இந்த நிலையில் காயம் காரணமாக டெஸ்ட் போட்டியில் தற்போது விளையாடாத பாண்டியா தற்போது உடல் தகுதியை மீண்டெடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

யார் சிறந்த ஆல்ரவுண்டர்
இந்த நிலையில் குலுஸ்னர் அளித்துள்ள பதில், ஸ்டோக்ஸ் சிறந்த ஆல்ரவுண்டராக தற்சமயம் இருக்கிறார். அவருடைய லெவலுக்கு இன்னும் ஹர்திக் பாண்டியா வரவில்லை என்று நான் நினைக்கிறேன். ஹர்திக் பாண்டியாவை விட பென் ஸ்டோக்ஸ் கொஞ்சம் முழுமையான ஆல் ரவுண்டாக திகழ்கிறார். ஆனால் ஹர்திக் பாண்டியாவை சாதாரணமாக எண்ணிவிட முடியாது.அவர் எப்போதும் கிரிக்கெட்டை கற்று வருகிறார்.

கற்று கொள்கிறார்
கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் ஹதித் பாண்டியா சாதித்த விஷயங்கள் அசாதாரணமானவை. ஹர்திக் பாண்டியா தனது வளர்ச்சியை இன்னும் நிறுத்தவில்லை.அவர் இன்னும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறார். காலம் செல்ல, செல்ல ஹர்திக் பாண்டியா ஒரு முழுமையான ஆல் ரவுண்டராக திகழ்வார். அந்த நிலை எட்டும் போது நிச்சயம் பென் ஸ்டோக்ஸ் இருக்கும் அளவில் ஹர்திக் பாண்டியாகவும் சிறந்த ஆல்ரவுண்டர் என்ற அளவில் இருப்பார்.

ஹர்திக் Vs ஸ்டோக்ஸ்
ஆனால் தற்சமயம் ஸ்டோக்ஸ் தான் சிறந்த வீரராக திகழ்கிறார். ஹர்திக் பாண்டியாவின் பேட்டிங்கில் யாராலும் குறை சொல்ல முடியாது. ஆனால் அவர் பந்துவீச்சு தான் கேள்வி எழுப்புகிறது. ஹர்திக் பாண்டியாவால் முழுமையாக அவருடைய ஓவர்களை அனைத்து போட்டிகளிலும் வீச முடியுமா என்று கேள்வி எழுகிறது. ஆனால் பேட்டிங்கை பொறுத்த வரை அவர் தான் சிறந்த வீரராக தற்சமயம் இருக்கிறார் என்று குலுஸ்னர் பாராட்டி இருக்கிறார். தற்சமயம் ஹர்திக் பாண்டியா தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வில் இருக்கிறார். இதேபோன்று பென் ஸ்டோக்ஸ் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications