WATCH: காயம்னு சொல்லிட்டு அந்த காரியம் பண்ணிய இளம்வீரர்..! இதுல வீடியோ வேற..! பொங்கும் ரசிகர்கள்
மும்பை: காயத்தால் அணியில் இடம்பெறாமல் இருக்கும் இளம் அதிரடி வீரர் ஹர்திக் பாண்டியா, பேஷன் ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வீடியோ வைரலாகி இருக்கிறது.
இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. அணியின் 3 வகையான கிரிக்கெட்டிலும் இடம்பெற்று விளையாடி வருகிறார். உலக கோப்பை தொடரில் அவர் இடம்பெற்றிருந்தார்.

இந்தியாவுக்காக உலக கோப்பையை கொண்டு வந்தே தீருவேன் என்று கோலியை விட அதிதீவிரமாக முழங்கியவர். ஆனால் அவரது ஆசை நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் புஸ்ஸானது. இந்தியா அந்த போட்டியில் தோற்றும் போனது.
உலக கோப்பை தொடரின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. அதன் காரணமாக தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் பாண்டியா கலந்து கொள்ள வில்லை. தற்போது இந்தியாவில் இருக்கும் பாண்டியா காயத்திற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டு உடற்பயிற்சியை செய்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது பிரபல அழகு நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட பேஷன் ஷோ ஒன்றில் பங்கேற்றார் ஹர்திக் பாண்டியா. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அழகான ராம்ப் வாக் செய்தார். அந்த நிகழ்வின் புகைப்படங்கள் பகிரப்பட்டது. அதில் பாண்ட்யா நடிகை லிசா ஹைடன் மற்றும் பேஷன் டிசைனர் அமித் அகர்வாலுடன் நடந்து வந்தார்.
அதனை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். அது தொடர்பான தமது மகிழ்ச்சியையும் அவர் வெளியிட்டிருந்தார். அவர் கூறியதாவது: இது எனக்கு வித்தியாசமான அனுபவம். ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது என்று தனது கருத்தினை பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் தொடர்ந்து பாண்டியாவின் இந்த பதிவை கமெண்ட் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications