Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சஞ்சு சாம்சனுக்கு டி20 போட்டியில் வாய்ப்பு இல்லை..ஆல் ரவுண்டருக்காக ஹர்திக் எடுத்த முடிவு - IND V SL

மும்பை : இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டி இன்று மும்பையில் 7 மணிக்கு தொடங்குகிறது. இதில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது.

ரோகித் சர்மா, கேஎல் ராகுல் விராட் கோலி போன்ற மூத்த வீரர்கள் இல்லாததால் இளம் படையை வைத்து இந்திய அணி இந்த ஆட்டத்தை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில் எந்தெந்த வீரர்கள் இடம் பெறுவார்கள் என்று ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டது. எனினும் ஹர்திக் பாண்டியாவின் கொள்கையால் சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்காத நிலை ஏற்படும்.

ஹர்திக் நிலை

ஹர்திக் நிலை

ஹர்திக் பாண்டியாவை பொறுத்தவரை பந்துவீச்சு செய்யக்கூடிய பேட்ஸ்மேனுக்கே முக்கியத்துவம் கொடுப்பார். நியூசிலாந்து தொடரின் போதே இது குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா டி20 கிரிக்கெட் மாறி வருவதால் பந்து வீச்சுத் தெரிந்த பேட்ஸ்மேன்கள் அணிக்கு தேவைப்படுகிறார்கள். இதனால் பேட்ஸ்மேன்களும் பந்து வீச கற்றுக் கொள்ள வேண்டும் என கூறியிருந்தார்.

வாய்ப்பு வழங்கவில்லை

வாய்ப்பு வழங்கவில்லை

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் கூட சஞ்சு சாம்சனுக்கு ஹர்திக் பாண்டியா வாய்ப்பு வழங்கவில்லை. சாம்சனை காட்டிலும் தீபக் ஹூடாவுக்கு தான் ஹர்திக் பாண்டியா முக்கியத்துவம் கொடுத்தார். இது குறித்து அப்போதே விளக்கம் அளித்த ஹர்திக் பாண்டியா சஞ்சு சாம்சனை சேர்க்க முடியாதது துரதிஷ்டமானது என்று தெரிவித்தார்.

பந்துவீச்சுக்கு தேவை

பந்துவீச்சுக்கு தேவை

தற்போது அதே பாணியை தான் இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியிலும் ஹர்திக் பாண்டியா கையாள்வார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அணியில் விக்கெட் கீப்பராக இசான் கிஷன் இருப்பதால் இரண்டாவது விக்கெட் கீப்பரை அணியில் சேர்க்க ஹர்திக் பாண்டியா தயாராக இல்லை. இதனால் தீபக் ஹூடா போன்ற ஆல் ரவுண்டரை சேர்த்தால் பந்துவீச்சுக்காவது உதவும் என ஹர்திக் பாண்டியா யோசிக்கிறார்.

ரசிகர்கள் விரக்தி

ரசிகர்கள் விரக்தி

இதனால் சஞ்சு சாம்சனுக்கு பதில் தீபக் ஹூடா தான் களமிறங்குவார் என 99 சதவீதம் உறுதியாகிவிட்டது. ஏற்கனவே சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்போது இலங்கைக்கு எதிரான டி20 தொடர்களிலும் அதே முடிவை இந்திய அணி நிர்வாகம் எடுக்க இருப்பது ரசிகர்களை விரக்தி அடைய செய்துள்ளது.

Story first published: Tuesday, January 3, 2023, 17:34 [IST]
Other articles published on Jan 3, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+