For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஸ்பீட் காட்டி போகும் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா... ஐபிஎல்லுக்கு தயார்

மும்பை : ஐபிஎல் 2020 அடுத்த மாதம் 19ம் தேதி துவங்கவுள்ள நிலையில் 8 அணிகளை சேர்ந்த வீரர்களும் தங்களை இந்த தொடருக்காக தயார் படுத்தி வருகின்றனர்.

இதேபோல நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் ஹர்திக் பாண்டியாவும் தன்னுடைய பயிற்சியை தீவிரப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு நடாஷா ஸ்டான்கோவிக்கும் பலவித எமோஜிகளுடன் தன்னுடைய கமெண்ட்டை பதிவு செய்துள்ளார்.

அணி வீரர்கள் தீவிர பயிற்சி

அணி வீரர்கள் தீவிர பயிற்சி

ஐபிஎல்லில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. தற்போது அடுத்த மாதம் 19ம் தேதி யூஏஇயில் ஐபிஎல் 2020 சீசன் துவங்கவுள்ள நிலையில், 8 அணிகளும் அணியின் வீரர்களும் அதற்கான பணிகளில் தீவிரமாக உள்ளனர். இந்த வாரத்தில் அனைத்து அணிகளும் தங்களது பயணங்களை துவங்கவுள்ளன.

முழுமூச்சில் தயாராகும் பாண்டியா

முழுமூச்சில் தயாராகும் பாண்டியா

இந்நிலையில், அனைத்து அணிகளை சேர்ந்த வீரர்களும் தனித்தனியாகவோ கூட்டாகவோ இணைந்து தங்களது பயிற்சிகளை துவங்கியுள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த ஆல் -ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் ஐபிஎல்லுக்காக தன்னை முழுமூச்சில் தயார் படுத்தி வருகிறார். இதுகுறித்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தன்னுடைய அணியையும் டாக் செய்துள்ளார்.

இன்ஸ்டாவில் புகைப்படம் வெளியீடு

இன்ஸ்டாவில் புகைப்படம் வெளியீடு

ஹர்திக் பயிற்சி மேற்கொள்ளும்வகையில் உள்ள அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் ஏராளமான கமெண்ட்டுகளையும் லைக்குகளையும் அள்ளி தெளித்துவரும் நிலையில், அவரது சக வீரர் நவ்தீப் சைனி மற்றும் நடாஷா ஸ்டான்கோவிக்கும் தங்களது கமெண்ட்டுகளை பதிவு செய்துள்ளனர். பல்வேறு எமோஜிகளுடன் நடாஷா கமெண்ட் செய்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

பிட்னசை சரியாக பேணும் பாண்டியா

பிட்னசை சரியாக பேணும் பாண்டியா

தன்னுடைய முதுகுவலி காரணமாக கடந்த செப்டம்பர் முதல் சர்வதேச போட்டிகளில் பங்கேற்காமல் உள்ளார் ஹர்திக் பாண்டியா. இந்நிலையில் அவர் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று விளையாடவுள்ளார். இவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரராக கருதப்படும் நிலையில், கொரோனாவால் ஏற்பட்ட 5 மாத ஓய்வு காரணமாக இவர் தனது வீட்டிலேயே பிட்னசை சரியானமுறையில் மேம்படுத்தி வருகிறார்.

Story first published: Wednesday, August 19, 2020, 15:20 [IST]
Other articles published on Aug 19, 2020
English summary
Hardik Pandya Hits The Ground Running, Natasa Stankovic Reacts
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+