For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“கேப்டனாக எனது முதல் பணி”.. கோலி, தோனியை குறிப்பிட்ட ஹர்திக் பாண்ட்யா.. நெகிழ்ச்சி பேச்சு - விவரம்

அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடர் குறித்து ஹர்திக் பாண்ட்யா பேசியுள்ளார்.

அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதவுள்ளது.

இரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி நாளை இரவு டப்ளின் நகரத்தில் நடைபெறுகிறது.

 அயர்லாந்து போட்டி

அயர்லாந்து போட்டி

இந்திய அணியின் முக்கிய வீரர்கள் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்காக சென்றுள்ள சூழலில், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இளம் படை களமிறங்கவுள்ளது. ஐபிஎல் தொடரில் தனது கேப்டன்சி திறமையை நிரூபித்த பாண்ட்யாவுக்கு முதன்முறையாக இந்திய அணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

பாண்ட்யா விளக்கம்

பாண்ட்யா விளக்கம்

இந்நிலையில் இதுகுறித்து ஹர்திக் பாண்ட்யா பேசியுள்ளார். அதில், விராட் கோலி மற்றும் தோனி ஆகியோரிடம் இருந்து நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டுள்ளேன். அதே சமயம் ஒரு கேப்டனாக எந்தவொரு சார்பும் இன்றி நடுநிலையாக நடந்துக்கொள்ள வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறேன். எதுவாக இருந்தாலும் செயல்முறைபடி முடிவெடுக்கவுள்ளேன்.

சுயமான முடிவு

சுயமான முடிவு

கேப்டனாக நான் எப்படி மற்ற வீரர்களை ஊக்குவிப்பேன் என்பதை காண காத்துள்ளேன். முழு பொறுப்பையும் நான் எடுத்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். சுயமான முடிவை எடுக்கும் வரை கடுமையான கேப்டனாக மாற முடியும். நான் அதனை செய்ய தான் விரும்புகிறேன் என ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.

பிசிசிஐ-ன் அதிருப்தி

பிசிசிஐ-ன் அதிருப்தி

இந்திய அணியில் கே.எல்.ராகுலின் கேப்டன்சி மீதும், ரிஷப் பண்ட்-ன் ஆட்டத்தின் மீதும் பிசிசிஐ அதிருப்தியில் உள்ளது. இதனால் தான் ஹர்திக் பாண்ட்யாவுக்கு கேப்டன்சிக்காக ஆதரவுகள் எழுந்து வருகின்றன. எனவே இந்த தொடரை அவர் வெற்றிகரமாக முடித்தால், அவர் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.

 2வது அணி

2வது அணி

அயர்லாந்து தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள அணியில் பெரும்பாலான வீரர்கள் தென்னாப்பிரிக்க தொடரில் விளையாடியுள்ளதால் அயர்லாந்து தொடர் மூலம் பலமான 2வது இந்திய அணியாக உருவெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, June 25, 2022, 20:03 [IST]
Other articles published on Jun 25, 2022
English summary
Hardik pandya about India vs Ireland Series ( இந்தியா vs அயர்லாந்து டி20 போட்டி ) அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடர் குறித்து ஹர்திக் பாண்ட்யா பேசியுள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+