For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய வரலாற்றில் முதல் முறை.. ஹர்திக் பாண்ட்யா பிரமாண்ட சாதனை.. குவிந்து வரும் பாராட்டுக்கள்!

செயிண்ட் கிட்ஸ்: இந்தியா அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

Recommended Video

IND vs WI Rohit Sharma அடுத்த 2 போட்டிகளில் ஆடுவது சந்தேகம்?

வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயித்த 165 என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி 19 ஓவர்களில் 195 ரன்களை அடித்து வெற்றி பெற்றது.

“அதிக ரிஸ்க் எடுத்திருக்கோம்” 3வது டி20ல் இந்தியா அசால்டாக வென்றது எப்படி.. ரோகித் சர்மா விளக்கம்! “அதிக ரிஸ்க் எடுத்திருக்கோம்” 3வது டி20ல் இந்தியா அசால்டாக வென்றது எப்படி.. ரோகித் சர்மா விளக்கம்!

பாண்ட்யாவின் மைல்கல்

பாண்ட்யாவின் மைல்கல்

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட்டில் இதுவரை எந்தவொரு வீரரும் செய்யாத சாதனையை நிகழ்த்தினார். ஆட்டத்தின் 8வது ஓவரில் பிராண்டன் கிங் விக்கெட்டை கைப்பற்றினார். டி20 கிரிக்கெட்டில் ஹர்திக்கின் 50வது விக்கெட் இதுவாகும். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 50 விக்கெட் மைல்கல்லை எட்டிய 8வது வீரர் ஹர்திக் பாண்ட்யாவாகும். இவருக்கு முன்பாக பும்ரா, யுவேந்திர சாஹல், ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள் எடுத்துள்ளனர்.

ஸ்பெஷல் ரெக்கார்ட்

ஸ்பெஷல் ரெக்கார்ட்

ஆனால் பேட்டிங்கில் ஹர்திக் பாண்ட்யா 800 ரன்களை ( 802 ) கடந்துள்ளார். இந்திய டி20 வரலாற்றில் 50 விக்கெட்கள், மற்றும் 800 ரன்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமை ஹர்திக் பாண்ட்யாவுக்கு வந்து சேர்ந்துள்ளது. முன்னணி வீரரான ஜடேஜா கூட இதுவரை இந்த மைல்கல்லை எட்டவில்லை.

அஃப்ரிடி வரிசையில் பாண்ட்யா

அஃப்ரிடி வரிசையில் பாண்ட்யா

சர்வதேச அளவில் இந்த சாதனையை செய்யும் 9வது வீரர் ஹர்திக் பாண்ட்யா ஆகும். இதற்கு முன்பாக சகிப் அல் ஹசன், சாஹித் அஃப்ரிடி, டுவைன் பிராவோ, ஜார்ஜ் டாக்ரெல், முகமது நமி, முகமது ஹஃபீஸ், கெவின் ஓ பிரைன், திஷாரா பெராரா ஆகியோர் அடித்துள்ளனர்.

ஹர்திக்கின் காயங்கள்

ஹர்திக்கின் காயங்கள்

கடந்த 2 ஆண்டுகளாக காயத்தால் பாதிக்கப்பட்டு, இந்திய அணியில் இருந்தே ஒதுக்கப்பட்டிருந்தார் ஹர்திக் பாண்ட்யா. ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக தனது புதிய பாதையை தொடங்கிய அவர், இந்திய அணியில் மீண்டும் அட்டகாசமான கம்பேக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, August 3, 2022, 14:40 [IST]
Other articles published on Aug 3, 2022
English summary
Hardik pandya's new record in India vs west indies t20 ( இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர் ) வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான டி20 போட்டியில் இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா பிரமாண்ட சாதனையை படைத்துள்ளார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X