Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2வது இன்னிங்சிற்கு மீசையை முறுக்கி தயாராகும் ஹர்திக் பாண்டியா

ராஜ்காட் : கடந்த 6 மாதங்களாக இந்திய அணியில் பங்கேற்காக ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தற்போது தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்று ஆடவுள்ளார்.

Recommended Video

Hardik Pandya joins in Team India | 2வது இன்னிங்சிற்கு தயாராகும் ஹர்திக் பாண்டியா

அறுவை சிகிச்சை காரணமாக பாண்டியாவின் பழைய பந்துவீச்சு அவருக்கு சாத்தியப்படவில்லை என்று தெரிவித்த தேர்வுக்குழு அவரை சர்வதேச போட்டிகளில் விலக்கி வைத்தது.

இந்நிலையில், லண்டனுக்கு சென்று தன்னுடைய பிட்னஸ் குறித்து ஆலோசனை பெற்ற ஹர்திக் பாண்டியா, சமீபத்தில் நடந்த டிஒய் படேல் தொடரில் 2 சதங்களை அடுத்தடுத்து அடித்தார்.

மீண்டுவந்த பாண்டியா

மீண்டுவந்த பாண்டியா

முதுகில் மேற்கொண்ட அறுவை சிகிச்சை காரணமாக கடந்த 6 மாதங்களாக இந்திய அணியில் இடம்பெறாத ஹர்திக் பாண்டியா தற்போது தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரில் இடம்பிடித்துள்ளார். தர்மசாலாவில் நாளை நடைபெறும் முதல் போட்டியில் அவர் களமிறங்கி ஆடவுள்ளார்.

அணியில் இடம்பெற போராட்டம்

அணியில் இடம்பெற போராட்டம்

அணியின் ஆல்-ரவுண்டராக விளங்கிவந்த ஹர்திக் பாண்டியா, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முதுகில் ஏற்பட்ட வலிக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதையடுத்து அவருடைய பிட்னஸ் குறித்து கேள்வி எழுந்தது. ஆயினும் பொறுமையுடன் காத்திருந்த ஹர்திக், லண்டன் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றார்.

2 சதங்கள் விளாசல்

2 சதங்கள் விளாசல்

இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற டிஒய் படேல் தொடரில் பங்கேற்று விளையாடிய ஹர்திக் பாண்டியா, அடுத்தடுத்து இரண்டு சதங்களை விளாசினார். அவரின் இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு மட்டுமின்றி தேர்வுக்குழுவினருக்கும் அவர்மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது. மேலும் இந்த தொடரில் ஹர்திக்கின் பந்துவீச்சும் கண்காணிக்கப்பட்டது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இந்நிலையில் தர்மசாலாவில் நாளை நடைபெறவுள்ள இந்தியா மற்றும் தெனனாப்பிரிக்காவிற்கு எதிரான சர்வதேச ஒருநாள் போட்டியில் ஹர்திக் பாண்டியா இடம்பிடித்துள்ளார். டிஒய் தொடரில் அவர் அடித்த அடுத்தடுத்த சதங்களை போல, இந்த தொடரிலும் அவர் சதங்களை விளாசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பந்துவீச்சிலும் கலக்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் போட்டிக்காக ஹர்திக் மேற்கொண்ட வலைபயிற்சிக்கான விடியோவை பிசிசிஐ தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Story first published: Wednesday, March 11, 2020, 16:04 [IST]
Other articles published on Mar 11, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+