Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

குறும்பா! என் உலகம் நீ தான் டா.. மகனுடன் மீண்டும் இணைந்த ஹர்திக் பாண்டியா- வீடியோ

மும்பை : பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா அண்மையில் தமது மனைவி நடாஷாவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு செர்பிய நாட்டைச் சேர்ந்த நடாஷா என்ற பெண்ணை ஹர்திக் பாண்டியா திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் ஆகஸ்தியா என்ற ஆண் குழந்தை பிறந்தது.

கிரிக்கெட்டில் உச்சம் தொட்டிருந்த ஹர்திக் பாண்டியாவின் தனிப்பட்ட வாழ்க்கை கடந்த சில ஆண்டுகளாக சரிவை நோக்கி சென்றது. ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று உச்சத்தில் இருந்தார்.

hardik pandya natasha cricket

அதன் பிறகு இரண்டாவது சீசனில் மீண்டும் இறுதிப் போட்டி வரை வந்தார். இந்த சூழலில் ஹர்திக் பாண்டியா கேப்டன்சி சிறப்பாக இருப்பதாக கூறி அவருக்கு இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியும் கிடைத்தது. இந்த நிலையில் தான் ஹர்திக் பாண்டியாவின் வாழ்க்கை சீட்டுக்கட்டு கோபுரம் போல் சரிந்தது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தாவிய ஹர்திக் பாண்டியா ரோகித் சர்மாவின் கேப்டன் பதவிக்கு ஆப்பு அடித்தார். இதனால் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளான ஹர்திக் பாண்டியா, கடந்த ஐபிஎல் சீசனில் கேப்டனாகவும் ஒரு வீரராகவும் சிறப்பாக செயல்படாமல் தடுமாறினார். இதே கட்டத்தில் ஹர்திக் பாண்டியாவும் அவருடைய மனைவி நடாஷாவும் பிரிவதாக அறிவித்தனர்.

நடாஷாவுக்கு வேறொரு நபருடன் தொடர்பு இருந்ததால் ஹர்திக் பாண்டியா இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் ஹர்திக் பாண்டியா தனது மகனான அகஸ்தியாவுடன் உயிரோடு உயிராக இருந்தார். ஆனால் விவகாரத்திற்கு பிறகு மனைவி நடாஷா ஹர்திக் பாண்டியாவின் குழந்தையை அழைத்து வெளிநாட்டுக்கு சென்று விட்டதாக கூறப்பட்டது.

இதனால் மகனை பார்க்க முடியாமல் ஹர்திக் பாண்டியா மிகவும் நெருக்கடியில் இருந்தார். இந்த சூழ்நிலையில் தான் டி20 உலக கோப்பை தொடரில் கடும் பயிற்சி மேற்கொண்ட ஹர்திக் பாண்டியா பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் ஜொலித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.



இதனால் ரசிகர்களின் நம்பிக்கையையும் மரியாதையையும் ஹர்திக் பாண்டியா மீண்டும் மீட்டார். இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா தனது மகனைப் பார்க்க முடியாமல் மிகவும் வருத்தத்தில் இருந்ததாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தான் ஹர்திக் பாண்டியாவுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்திருக்கிறது. மகனான அகஸ்தியா தற்போது ஹர்திக் பாண்டியாவை மும்பையில் சந்தித்திருக்கிறார்.

தனது மகனை பார்த்த மகிழ்ச்சியில் ஹர்திக் பாண்டியா தற்போது உற்சாக கொண்டாட்டத்தில் இருக்கிறார். இந்த சூழலில் மும்பையில் இருவரும் இணைந்து ஊர் சுற்றுகிறார்கள். தனது மகனை பல்வேறு இடத்திற்கு அழைத்து சென்று ஹர்திக் பாண்டியா நல்ல நினைவுகளை சேர்த்து வருகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.

இதனை பார்க்கும்போது ரசிகர்கள் ஆனந்த கண்ணீர் விட்டு வருகின்றன ஆனால் ஹர்திக் பாண்டியாவின் மகன் நிரந்தரமாக அவருடன் வந்து விட்டாரா? இல்லை வார இறுதியில் மட்டும் பார்க்கும் வாய்ப்பு ஹரிதிக் பாண்டியாவுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறதா என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை. எனினும் முன்னாள் மனைவி நட்டாஷா மகனை பார்க்கவாவது ஹர்திக்கை அனுமதித்தார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Story first published: Sunday, September 22, 2024, 14:35 [IST]
Other articles published on Sep 22, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+