Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிரேக் அப் ஆன 2 மாதம்.. இன்ஸ்டாகிராமில் புதிய காதலியுடன் ஹர்திக் பாண்டியா.. யார் இந்த மஹிகா சர்மா?

மும்பை: இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தனது 3வது காதலியை அறிமுகம் செய்துள்ளார். பிரிட்டன் மாடல் ஜாஸ்மின் வாலியாவுடன் 2 மாதங்களுக்கு முன் ஹர்திக் பாண்டியா பிரேக் அப் செய்த நிலையில், தற்போது இந்திய மாடல் மற்றும் நடிகையான மஹிகா சர்மாவுடன் காதல் உறவில் இணைந்துள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக ஓய்வில் இருக்கிறார். ஹர்திக் பாண்டியாவுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடாஷா ஸ்டான்கோவிக் உடன் விவாகரத்து நடந்தது. அதற்கு முன்பாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் அகஸ்தியா என்ற மகன் இருக்கிறார். நடாஷாவுடன் பிரிந்தாலும், மகனுக்காக இருவரும் நண்பர்களாக இருந்து வருகின்றனர்.

Hardik Pandya Relationship

அதேபோல் நடாஷாவுடன் திருமண உறவில் இருந்து பிரிவதற்கு முன்பாகவே ஹர்திக் பாண்டியா பிரிட்டன் மாடலான ஜாஸ்மின் வாலியா என்பவருடன் காதல் உறவில் இருந்தார். ஹர்திக் பாண்டியாவின் காதல் உறவே நடாஷா உடனான திருமண பந்தம் முடிவுக்கு வருவதற்கு காரணமாக அமைந்தது. கடந்த ஓராண்டாக ஜாஸ்மின் வாலியாவுடன் ஹர்திக் பாண்டியா காதலில் இருந்தார்.

ஹர்திக் பாண்டியா பயணிக்கும் ஒவ்வொரு நாடுகளுக்கும் ஜாஸ்மின் வாலியாவும் பயணித்து வந்தார். மும்பை இந்தியன்ஸ் பேருந்தில் பயணிக்கும் வரை இவர்களின் உறவு இருந்தது. இந்த நிலையில் 2 மாதங்களுக்கு முன்பாக ஜாஸ்மின் வாலியா - ஹர்திக் பாண்டியா இடையிலான உறவு முடிவுக்கு வந்தது. ஹர்திக் பாண்டியா உடனான பிரிவு காரணமாக, அவர் மீண்டும் லண்டனுக்கு சென்றுவிட்டார்.

தற்போது ஹர்திக் பாண்டியா மீண்டும் புதிய நடிகை ஒருவருடன் காதல் உறவில் இணைந்துள்ளார். மாடலிங் துறையில் கோலோச்சி வரும் மஹிகா சர்மாவுடன் ஹர்திக் பாண்டியா காதலில் விழுந்துள்ளார். மஹிகா சர்மா எல்லி, கிரேசியா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் விளம்பரத் தூதராக வலம் வருகிறார். தனிஷ்க், விவோ உள்ளிட்ட நிறுவனங்களுக்காக மாடலாக பணியாற்றி வருகிறார்.

இவர்கள் இடையிலான உறவை ஹர்திக் பாண்டியாவே அதிகாரப்பூர்வமாக இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார். இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள ஹர்திக் பாண்டியா, நேரடியாக மஹிகா சர்மாவையும் இணைத்து பதிவிட்டுள்ளார். பிரேக் அப் ஆன 2 மாதங்களுக்குள் ஹர்திக் பாண்டியா அடுத்த காதலில் விழுந்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Story first published: Friday, October 10, 2025, 23:45 [IST]
Other articles published on Oct 10, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+