For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரஷித் கானிடம் பொறுப்பை கொடுத்து விட்டேன்.. வெற்றி குறித்து ஹர்திக் பாண்டியா பேச்சு..வேறலெவல் கேப்டன்

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் அணி 11 ரன்கள் என்ற இலக்கை 13.5 வது ஓவரிலே எட்டியது. இதில் ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி 15 பந்துகளில் 39 ரன்களை குவித்தார்.

இதில் மூன்று பவுண்டரிகளும் மூன்று சிக்சர்களும் அடங்கும். பந்துவீச்சிலும் ஹர்திக் பாண்டியா ஓவர்களை சரியாக மாற்றி எதிரணிக்கு நெருக்கடி கொடுத்தார். இந்த நிலையில் வெற்றி குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா பந்து வீசும் போது சுழற் பந்துவீச்சாளர்களை நான் பார்த்துக் கொள்ளவே இல்லை.

	இப்படியே ஆடினா இந்திய அணிக்குள் வரவே முடியாது பாஸ்.. சொதப்பும் சஞ்சு சாம்சன்.. கொதிக்கும் ரசிகர்கள்!

அந்த பொறுப்பை ரஷித் கானிடம் கொடுத்து விட்டேன். ஏனென்றால் ரஷித் காணும் நூரும் ஒரே மொழியை பேசுவார்கள். சுழற்பந்து வீச்சை வீசும் போது பில்டர்களை எங்கு நிறுத்த வேண்டும் என்பது குறித்து ரஷித் கானை தவிர வேறு யாருக்கும் சிறப்பாக தெரியாது. எனவே இருவரும் பந்து வீசும் போது ஒரே மாதிரியான பில்டிங் தான் நிறுத்துவோம்.

ஏனென்றால் அவர்களுக்கு தங்கள் மீது அதிக நம்பிக்கை இருக்கிறது. நான் விளையாடிய விக்கெட் கீப்பர்களில் விரித்மான் சாகா ஒரு சிறந்த கீப்பராக விளங்குகிறார். அவருடைய பங்களிப்பு அணியின் மதிப்பை கூட்டுகிறது. கடந்த ஆட்டத்தில் நான் சில தவறான முடிவை எடுத்தேன்.கடந்த போட்டியில் என்ன தவறு செய்தோம் என்பது குறித்து யோசித்து முடிவு எடுக்க எனக்கு நேரம் கிடைத்தது.

இன்று நான் களத்திற்கு வரும்போது பாதி வேலை ஏற்கனவே முடிந்து விட்டது. இதனால் வெற்றி எங்களுக்கு எளிதாக அமைந்தது என்று ஹர்திக் பாண்டியா கூறினார். இது குறித்து பேசிய ரஷீத் கான் பேட்ஸ்மேனுக்கு எளிதான பந்தை வீசுகிறோம் என்ற அறிகுறிகளை கொடுக்கக் கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருந்தோம். கடந்த ஆட்டத்தில் எனக்கு மோசமான நாளாக அமைந்தது. அந்த போட்டியில் நான் என்ன தவறு செய்தேன் என்று வீடியோ மூலம் பார்த்து தெரிந்து கொண்டு தற்போது அதனை இன்று சரி செய்தேன் என ரஷித் கான் கூறியுள்ளார்.

Story first published: Saturday, May 6, 2023, 0:01 [IST]
Other articles published on May 6, 2023
English summary
Hardik Pandya reveals he give the duty to rashid khan to take care of spinners ரஷித் கானிடம் பொறுப்பை கொடுத்து விட்டேன்.. வெற்றி குறித்து ஹர்திக் பாண்டியா பேச்சு..வேறலெவல் கேப்டன்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+