Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நடாஷா இருக்க நாய்க்குட்டியை கொஞ்சிய ஹர்திக் பாண்டியா... குடும்ப போட்டோ வெளியீடு

மும்பை : நடாஷா ஸ்டான்கோவிக்குடன் தான் மற்றும் சில நாய்க்குட்டிகளுடன் கூடிய புகைப்படத்தை ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தில் கர்ப்பிணியான நடாஷா ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்க நாய்க்குட்டியை கொஞ்சிக் கொண்டிருக்கிறார் ஹர்திக் பாண்டியா.

தன்னுடைய குடும்பம் என்று இந்த புகைப்படத்திற்கு கேப்ஷன் தெரிவித்துள்ளார் பாண்டியா. இந்த புகைப்படத்திற்கு எராளமான ரசிகர்கள் தங்களது லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் வாரி குவித்து வருகின்றனர்.

ஐபிஎல்லுக்காக காத்திருப்பு

ஐபிஎல்லுக்காக காத்திருப்பு

ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தனது முதுகில் ஏற்பட்ட வலி காரணமாக கடந்த நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இடம்பெறவில்லை. ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா வைரஸ் அதிலும் கல்லை போட்டது. ஐபிஎல் போட்டிகள் காலவரையன்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அது நடைபெறுவதற்காக காத்திருக்கிறார் ஹர்திக் பாண்டியா.

அறிவித்த பாண்டியா

அறிவித்த பாண்டியா

கடந்த ஜனவரி 1ம் தேதி தன்னுடைய நிச்சயதார்த்தத்தை அறிவித்த பாண்டியா, கடந்த மாதத்தில் நடாஷாவின் கர்ப்பம் குறித்து அறிவித்தார். புதிய உறுப்பினருக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட இந்த ஓய்வில், சமூக வலைதளங்களில் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறார். தொடர்ந்து தன்னை குறித்தும் தன்னுடைய குடும்பத்தினர் குறித்தும் இவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்று வருகின்றன.

இன்ஸ்டாவில் வெளியீடு

இன்ஸ்டாவில் வெளியீடு

இந்நிலையில் நடாஷாவுடன் தான் மற்றும் தன்னுடைய நாய்க்குட்டிகள் இணைந்திருக்கும் புதிய புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் பாண்டியா. இந்த புகைப்படத்திற்கு குடும்பம் என்று கேப்ஷன் வெளியிட்டுள்ளார். மேலும் புகைப்படத்தை எடுத்தவர், ஸ்டைலிஸ்ட்கள் என்று பட்டியலும் வெளியிட்டுள்ளார்.

'க்யூட்' என பாராட்டு

'க்யூட்' என பாராட்டு

இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் அதிகளவிலான லைக்குகளை குவித்துள்ளனர். மேலும் பிடித்தமான தம்பதி என்றும் க்யூட் என்றும் பல்வேறு கமெண்டுகளையும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். தன்னுடைய அண்ணன், நடாஷா ஸ்டான்கோவிக் உள்ளிட்டவர்களுடன் இந்த லாக்டவுன் காலத்திலும் மிகவும் சிறப்பாகவே கழிகிறது பாண்டியாவின் வாழ்க்கை

Story first published: Saturday, July 18, 2020, 12:03 [IST]
Other articles published on Jul 18, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+