Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டின்னர் டைம் வித் பார்ட்னர்... ஹர்திக் பாண்டியா -நடாஷா கலகல... வாழ்வுதான்!

மும்பை : 4 மாதங்கள் தன்னுடைய குடும்பத்தை பிரிந்திருந்த ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தற்போது தன்னுடைய குடும்பத்தினருடன் சிறப்பான வகையில் நேரத்தை செலவழித்து வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பை திரும்பிய அவர் தன்னுடைய மகனுடன் தான் இருக்கும் புகைப்படங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.

Hardik Pandyas Dinner Date With Natasa Stankovic

இந்நிலையில் இரவு உணவை பகிர்ந்து கொண்ட புகைப்படங்களை நடாஷாவும் ஹர்திக் பாண்டியாவும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டனர்.

ஐபிஎல் 2020 தொடர் மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களில் விளையாடிய இந்திய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, நான்கு மாதங்களுக்கு பிறகு மீண்டும் தன்னுடைய மகன் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்துள்ளார். தொடர்ந்து தன்னுடைய மகனுடன் தான் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

Hardik Pandyas Dinner Date With Natasa Stankovic

இந்நிலையில், தன்னுடைய பார்ட்னர் நடாஷா ஸ்டான்கோவிக்குடன் நீண்ட நாட்களுக்கு பிறகு பாண்டியா டின்னர் சாப்பிட்டு மகிழ்ந்தார். இதன் புகைப்படங்களை நடாஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். இதையடுத்து ஹர்திக் பாண்டியாவும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.

கடந்த டி20 தொடரின் இறுதிப்போட்டியில் தான் தனது குடும்பத்தினரை மிகவும் மிஸ் செய்வதாகவும், டெஸ்ட் போட்டிகளுக்கு ஆஸ்திரேலியாவில் இருக்க மாட்டேன் என்றும் ஹர்திக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, December 17, 2020, 19:38 [IST]
Other articles published on Dec 17, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+