Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹர்திக் பாண்டியா நிச்சயதார்த்தம்... வாழ்த்து மழையில் நனையவிட்ட பிரபலங்கள்

Recommended Video

Hardik Pandya engaged to Natasha Stankovic in speedboat

துபாய் : புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக துபாய் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, நடுக்கடலில் தன்னுடைய நீண்டநாள் காதலி நடாஷா ஸ்டான்கோவிக்குடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

இந்த நிச்சயதார்த்தத்தில் அவர்கள் இருவர் மட்டுமே இருந்தனர். நடாஷாவிற்கு மோதிரம் அணிவித்தும் கேக் வெட்டியும் நிச்சயதார்த்தத்தை நடுக்கடலில் ஸ்பீட் போட்டில் இந்த ஜோடி கொண்டாடியது. இதையடுத்து புகைப்படங்கள் மற்றும் வீடியோவை ஹர்திக் பாண்டியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.

ஹர்திக் பாண்டியாவின் நிச்சயதார்த்தத்தை அடுத்து சக கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவரை வாழ்த்து மழையில் நனைய விட்டனர்.

காதலி குறித்த அறிவிப்பு

காதலி குறித்த அறிவிப்பு

ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஸ்டான்கோவிக் இருவரும் காதலித்து வருவதாக நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த நிலையில், புத்தாண்டு தினமான நேற்று தன்னுடைய காதலி குறித்து அறிவித்த ஹர்திக், அவருடன் நடுக்கடலில் நிச்சயதார்த்தமும் செய்து கொண்டுள்ளார்.

பாராட்டு மழையில் ஹர்திக்

பாராட்டு மழையில் ஹர்திக்

புத்தாண்டை ஒட்டி நள்ளிரவு 12 மணிக்கு தன்னுடைய காதலி யார் என்பதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறிய ஹர்திக் தொடர்ந்து நிச்சயதார்த்த வீடியோவையும் பகிர்ந்தார். இதையடுத்து அவரது ரசிகர்கள், சக வீரர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் உள்ளிட்டவர்கள் அவருக்கு தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ஹர்திக்குக்கு வாழ்த்து

ஹர்திக் மற்றும் நடாஷா இருவர் மட்டுமே பங்கேற்ற தன்னுடைய நிச்சயதார்த்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹர்திக் வெளியிட அனைவரும் மிகுந்த ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர். இதை வெளிப்படியாக தன்னுடைய கமெண்ட்டில் கூறிய விராட் கோலி, அவர்கள் இருவருக்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

சக வீரர்கள் வாழ்த்து

சக வீரர்கள் வாழ்த்து

ஹர்திக் பாண்டியாவின் நிச்சயதார்த்தத்திற்கு முன்னாள் கேப்டன் தோனியின் மனைவி சாக்ஷி தோனி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேபோல சக வீரர்கள் கே.எல்.ராகுல், யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

டிவி நட்சத்திரங்களும் வாழ்த்து

டிவி நட்சத்திரங்களும் வாழ்த்து

இந்நிலையில் சுனில் ஷெட்டி, ஆதித்யா ஷெட்டி மற்றும் சோனல் சஹான் போன்ற பாலிவுட் நட்சத்திரங்களும் கரிஷ்மா கோடக், ஜெய் பனுசாலி, கரன் தாக்கர் போன்ற டிவி பிரபலங்களும் ஆல்-ரவுண்டர் ஹர்திக் மற்றும் செர்பிய நடிகை நடாஷாவிற்கு வாழ்த்துக்களை பகிர்ந்தனர்.

Story first published: Thursday, January 2, 2020, 12:07 [IST]
Other articles published on Jan 2, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+