“கொஞ்சம் ஓவராதான் போறோமோ..” செய்தியாளர்களுக்கு ஹர்திக் தந்த குசும்பு பதில்.. இணையத்தில் சிரிப்பலை!
மொஹாலி: இந்திய அணியின் தோல்வி குறித்து ஹர்திக் பாண்ட்யா கூறிய குசும்பு பதில் இணையத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 208 ரன்களை சேர்த்தது. இதன் பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி கண்டது.

இந்திய அணி தோல்வி
டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரையில் 200+ ரன்கள் இலக்கை எட்டுவது மிகவும் கடினமான ஒன்றாகும். பலமான ஆஸ்திரேலிய அணியே இதற்கு முன்னர் ஒரே ஒருமுறை தான் அந்த இலக்கை எட்டியுள்ளது. இப்படி இருக்கையில் இந்திய அணி ஏன் இவ்வளவு மோசமாக விளையாடியுள்ளது என ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் அதற்கு ஹர்திக் பாண்ட்யா பதில் கூறியுள்ளார்.

திருப்புமுனை எது
நேற்றைய போட்டி குறித்து பேச ஹர்திக் பாண்ட்யா செய்தியாளர்களை சந்தித்த போது, ஆட்டம் எந்த இடத்தில் எங்கள் கையை விட்டு சென்றது என்பது தெரியவில்லை எனக் கூறினார். அப்போது செய்தியாளர் ஒருவர், ஹர்ஷல் வீசிய 18வது ஓவர் எனக் கூறுவோமா? ஏனென்றால் அதில் தான் 22 ரன்கள் சென்றது எனக் கூறினார்.

குசும்பு பதில்
இதனை கேட்ட ஹர்திக், " நீங்களே சொல்லுங்கள் அதனை, உங்களுக்கு தெரிந்தது எங்களுக்கு தெரியவில்லை. ஒருவேளை தெரிந்திருந்தால் அப்போதே அவரை தடுத்து நிறுத்தியிருக்கலாம் என நகைச்சுவையான பாணியில் கூறினார். இதனால் செய்தியாளர்கள் சந்திப்பில் சற்று சிரிப்பலை எழுந்தது.

கம்பேக் கொடுப்போம்
தொடர்ந்து பேசிய அவர், இதோ பாருங்கள், யாரையும், எந்த ஓவரையும் நாம் குறிப்பிட்டு குறை கூற முடியாது. ஏனென்றால் அவர்களும் ஒரே ஓவரில் 20 ரன்கள் வரை கொடுத்தார்கள். இந்த தொடரில் இன்னும் 2 போட்டிகளில் இருக்கின்றதே, கம்பேக் கொடுப்போம் எனக் கூறினார்.


Click it and Unblock the Notifications