Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹர்திக் பாண்ட்யா புது வாட்ச்.. தலை சுற்ற வைக்கும் விலை - ஊருக்கே பட்ஜெட் போட்டிருக்கலாம் போல

மும்பை: ஒரு வாட்ச் வாங்குனது குத்தமா என்று பாண்ட்யாவை புலம்ப வைத்துவிட்டார்கள் கிரிக்கெட் ரசிகர்கள்.

ஹர்திக் பாண்ட்யா.. இந்திய அணியில் பெரும் நம்பிக்கை விதைத்த ஆல் ரவுண்டராக வலம் வந்தார். ஆனால், முதுகு வலி காரணமாக அறுவை சிகிச்சை செய்த பிறகு அவரால் சரிவர பந்து வீச முடியவில்லை.

பேட்டிங் மட்டும் செய்யும் பாண்ட்யா, இப்போது அதிகம் பந்து வீசுவதில்லை. இதனால், ஆல் ரவுண்டர் எனும் அந்தஸ்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறார்.

சொதப்பிய பாண்ட்யா

சொதப்பிய பாண்ட்யா

இங்கிலாந்து சென்றிருக்கும் இந்திய அணியில் பாண்ட்யாவுக்கு இடம் கிடைக்காமல் போனதற்கு காரணம் அவரால் பந்து வீச முடியாமல் போனதே. ஒரு பேட்ஸ்மேனாக அவரை இங்கிலாந்து அழைத்துச் செல்ல பிசிசிஐ விரும்பவில்லை. கடந்த 2018ம் ஆண்டு இங்கிலாந்து டூரில் இடம் பிடித்திருந்த பாண்ட்யா, இம்முறை செல்லமுடியவில்லை. அவருக்கு பதிலாக, ஒரு ஃபாஸ்ட் பவுலிங் ஆல் ரவுண்டராக ஷர்துல் தாகூர் அணியில் தேர்வு செய்யப்பட்டார். அவரும் முதல் போட்டியில் சிறப்பாகவே பந்து வீசினார். ஸோ, இனி பாண்ட்யா டெஸ்ட் போட்டிகளில் இடம் பிடிப்பது ரொம்பவே கடினமான ஒன்று. அது மட்டுமின்றி, இலங்கை சென்ற இந்திய 'ஏ' அணியில் இடம் பிடித்த பாண்ட்யா, அத்தொடரில் சிறப்பாகவே விளையாடவில்லை. பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சொதப்பினார்.

திணறும் பாண்ட்யா

திணறும் பாண்ட்யா

டி20 போட்டிகளில் கூட அவர் அனைத்து மேட்சிலும் 4 ஓவர்கள் முழுமையாக வீசுவது இல்லை. பெரும்பாலும் 3 ஓவர்களே வீசுகிறார். அப்படிப்பார்த்தால், இனி ஒருநாள் கிரிக்கெட்டிலும் பாண்ட்யாவை பார்க்க முடியுமா என்று தெரியவில்லை. டி20ல் விளையாடுவார் போல. ஆனால், முதுகுவலி மட்டும் ஏற்படாமல் இருந்திருந்தால், அறுவை சிகிச்சை செய்யாமல் இருந்திருந்தால், இந்தியாவின் முக்கியமான "சொத்து"க்களில் ஒருவராக இருந்திருப்பார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இப்போது ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தீவிர பயிற்சியில் இருக்கிறார். சரி! விஷயத்துக்கு வருவோம்.

விலை என்ன தெரியுமா?

விலை என்ன தெரியுமா?

இப்படி சிறப்பாக விளையாடாமல் இருந்தாலும், இப்போதும் லைம்லைட்டில் இருக்கிறார் பாண்ட்யா. காரணம் அவர் வாங்கிய வாட்ச். இதுகுறித்த சில புகைப்படங்களை பாண்ட்யா தனது சமூக தளங்களில் வெளியிட்டுள்ளார். பார்ப்பதற்கு ரோட்டோரக் கடைகளில் விற்கும் வாட்ச் போலத் தான் தெரிகிறது. சரி.. தம்பி! இதுல என்ன இருக்கு.. வாட்ச் வாங்குனதை எல்லாமா சமூக தளத்துல போடுவீங்க?.. பரவால்ல.. ஏதோ சுமாரா இருக்கு.. ஆமா, எவ்ளோ இது? ஒரு 350 ரூபா இருக்குமா? என்று நமது மைண்ட் வாய்ஸ் ஒலித்துக் கொண்டிருக்க, இதன் உண்மையான விலையை கேட்ட ஒரு நொடி நமக்கு தலை சுற்றியது என்னமோ உண்மை தான்.. ஒண்ணுமில்ல.. ஜஸ்ட் 5 கோடி.

மொத்தம் 8 அறைகள்

மொத்தம் 8 அறைகள்

Patek Philippe Nautilus Platinum 5711 எனும் வாட்சை தான் ஹர்திக் பாண்ட்யா அவர்கள் 5 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறாராம். எப்போதும் காஸ்ட்லி பொருட்கள் மீது மோகம் கொண்டிருக்கும் பாண்ட்யா, 5 கோடிக்கு வாட்ச் வாங்கியது ஒரு மேட்டரே அல்ல என்கின்றனர் அவரை நன்கு அறிந்த ரசிகர்கள். மறுபக்கம் சிலர், ஆடம்பரமாக இருப்பது அவரவர் விருப்பம். ஆனால், ஒரு வாட்சை 5 கோடிக்கு வாங்குவது என்பது கொஞ்சம் ஓவர் தான் என்கின்றனர். இன்னும் சிலரோ, "இவ்ளோ பணத்துக்கு வாட்ச் வாங்கினதுக்கு பதில், 10,000 ஏழைப் பிள்ளைகளை படிக்க வைத்திருக்கலாம். நாடு முன்னேறும்" என்றும் பதிவிட்டுள்ளனர். மும்பை அணியில் கலக்கி வரும் அண்ணன் தம்பிகளான க்ருனால் பாண்ட்யா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர், மும்பையின் Rustamji Paramount Society-ல் 8 BHK ஃபிளாட் ஒன்றும் வாங்கியிருக்கிறார்கள். 3838 சதுர அடி கொண்ட இந்த ஃபிளாட்டில் மொத்தம் 8 அறைகள் உள்ளன. இதன் விலை 30 கோடியாகும். பாலிவுட் நடிகர்கள் திஷா படானி மற்றும் டைகர் ஷெரோஃப் ஆகியோருக்கும் இங்கு வீடு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, August 25, 2021, 15:27 [IST]
Other articles published on Aug 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+