Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா தோற்றதும் நல்லது தான்.. ஹர்திக் பாண்ட்யா போட்ட திட்டம் பலன் கிடைத்தது.. எப்படி தெரியுமா??

புனே: இலங்கை அணியுடனான 2வது டி20 போட்டியில் தோல்வியடைந்ததற்கு இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தெரிந்தே செய்த சில தவறுகள் தான் காரணமாக அமைந்துள்ளது. ஆனால் இதுவும் நல்லது தான்.

இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி புனேவில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியிருந்தது.

முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 206 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 190 ரன்களை மட்டுமே எடுத்து தோற்றது.

 பாதிப்பு இல்லை

பாதிப்பு இல்லை

இந்நிலையில் இந்தியா தோல்வியடைந்ததும் பெரிய பாதிப்பு கிடையாது என்றால் ஏற்றுக்கொள்வீர்களா? ஆனால் அதுதான் உண்மை. முதல் டி20ல் இருந்தே ஹர்திக் பாண்ட்யா விநோத திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். அதாவது அணியை இக்கட்டான சூழலுக்கு கொண்டு செல்வேன், அதை அவர்கள் அனுபவித்து பழகினால் தான் பெரிய போட்டிகளை சமாளிக்க முடியும் எனத்தெரிவித்திருந்தார். அதற்கேற்றார் போல முதல் டி20ல் 20வது ஓவரை அக்‌ஷருக்கு கொடுத்தார். 2வது டி20ல் டாஸில் வேண்டுமென்றே ரிஸ்க் எடுத்தார்.

என்ன திட்டம்

என்ன திட்டம்

புனே மைதானத்தில் நேரம் போக போக பிட்ச் மெதுவாகும் என்பதால், முதலில் பேட்டிங் செய்யும் அணிகள் தான் அதிகளவில் வெற்றி கண்டுள்ளன. 2வது பேட்டிங் செய்வது கடினமாகும். இதனை டாஸின் போதே நெரியாளரும் பண்ட்யாவிடம் கூறினார். ஆனால் வேண்டுமென்றே கடின சூழலை எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக பவுலிங்கை தேர்வு செய்திருந்தார். முதல் போட்டியிலும் டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் எடுத்திருப்பேன் என துணிச்சலுடன் கூறினார்.

பலன் என்ன?

பலன் என்ன?

பாண்ட்யா கூறியது பலன் தந்தது என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் முதல் டி20 நடந்த மும்பை களத்தில் முதலில் பேட்டிங் செய்து அதுவும் 162 ரன்களை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாகும். ஆனால் அதை அசால்ட்டாக செய்து முடித்தார். இதே போல புனேவில் 2வது பேட்டிங் செய்து 206 ரன்களை விரட்டுவது மிக கடினம். அதையும் 190 ரன்கள் வரை சென்று கடைசி நேரத்தில் தவறவிட்டுள்ளார். கடைசி ஓவரில் 21 ரன்கள் தான் தேவை என்ற போது ஒரே ஒரு பேட்ஸ்மேன் நின்றிருந்தால் அடித்திருக்கலாம்.

 உலகக்கோப்பை அனுபவங்கள்

உலகக்கோப்பை அனுபவங்கள்

உலகக்கோப்பை தொடர்களில் லீக் சுற்றுகளில் டாஸில் வெற்றி பெறும் இந்திய அணி, சாதகமான முடிவை எடுக்கிறது. ஆனால் நாக் அவுட் போட்டிகளில் டாஸில் தோற்றுவிட்டால், சமாளிக்க முடியாமல் திணறுகிறது. எனவே அதனை தற்போது இருந்தே சரிசெய்து, எப்படிபட்ட முடிவுகள் டாஸில் வந்தாலும் அதனை சமாளித்து விளையாட அவர் பயிற்சி கொடுத்து வருகிறார்.

Story first published: Friday, January 6, 2023, 7:42 [IST]
Other articles published on Jan 6, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+