For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரே ஒரு சிக்ஸர்.. பாண்ட்யாவுக்காக வரிசையில் காத்திருக்கும் நிறுவனங்கள்..ஒரு நாளுக்கே இத்தனை கோடியாம்

துபாய்: பாகிஸ்தான் அணியுடனான போட்டிக்கு பிறகு ஹர்திக் பாண்ட்யாவின் விளம்பர மதிப்பு ஏகபோகத்திற்கு எகிறியுள்ளது.

Recommended Video

IND vs PAK Hardik Pandya சொன்ன Chasing ரகசியம் *Cricket

ஆசிய கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் சமீபத்தில் மோதின. இதில் இந்தியா 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணியின் வெற்றிக்கு ஹர்திக் பாண்ட்யா அடித்த கடைசி நேர சிக்ஸர் தான் முக்கிய காரணமாக அமைந்தது.

 அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

இந்த போட்டியில் 17 பந்துகளை சந்தித்த ஹர்திக் பாண்ட்யா 4 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸருடன் 33 ரன்களை அடித்தார். குறிப்பாக கடைசி 3 பந்துகளில் 6 ரன்கள் என்ற தேவை இருந்த சூழலில் பாண்ட்யா ஒரே ஒரு சிக்ஸரை பறக்கவிட்டு, இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டார். மேலும் ஆட்ட நாயகன் விருதையும் தட்டி சென்றார்.

பாண்ட்யாவின் மார்க்கெட்

பாண்ட்யாவின் மார்க்கெட்

இந்த ஒரு சிக்ஸர் மூலம் ஹர்திக் பாண்ட்யாவின் விளம்பர மார்கெட்டும் சூடுபிடித்துள்ளது. பாண்ட்யாவின் விளம்பரங்களை மேற்பார்வை செய்யும் நிறுவனம் இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ளது. அதில், பாகிஸ்தான் போட்டிக்கு பிறகு பாண்ட்யாவின் விளம்பர மதிப்பு 30 - 40% அளவிற்கு ஏற்றம் கண்டுள்ளது. அவரின் வீட்டு கதவுகளை 6- 7 நிறுவனங்கள் தட்டியுள்ளதாகவும், அவரை விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்ய பல கோடிகளை வழங்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

எவ்வளவு தொகை

எவ்வளவு தொகை

விளம்பர படப்பிடிப்புக்கு ஒரு நாளைக்கு ரூ. 2 கோடி வரை ஹர்திக் பாண்ட்யா கேட்டுள்ளதாக தெரிகிறது. ஒரு விளம்பரத்திற்கு குறைந்தது 2 நாட்கள் படப்பிடிப்பு ஒப்பந்தம் செய்வதால், ஒரு நிறுவனத்திற்கு குறைந்தது ரூ.4 கோடி வரை ஹர்திக் பாண்ட்யா பெறுகிறார். இது முந்தைய தொகையை விட பல மடங்கு அதிகமாகும்.

சமூகவலைதள வருமானம்

சமூகவலைதள வருமானம்

பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்கள் மூலமும் விளம்பர பணிகளை செய்து வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணியில் அதிக ஃபாலோவர்களை கொண்ட 3 வீரர் பாண்ட்யா தான் ஆகும். அந்தவகையில் ஹர்திக் பாண்ட்யா தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை போடுவதற்கு குறைந்தது ரூ.40 லட்சம் சம்பளமாக பெறுவதாக தெரிகிறது.

மொத்த ஒப்பந்தங்கள்

மொத்த ஒப்பந்தங்கள்

ஹர்திக் பாண்ட்யா தற்போது வரை 8 - 10 நிறுவனங்களுக்கு விளம்பர தூதராக செயல்பட்டு வருகிறார். அவற்றின் ஒப்பந்தங்கள் இன்னும் முடிவடையவில்லை. புதிதாக 5 முதல் 6 நிறுவனங்களுக்கான ஒப்பந்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாண்ட்யாவின் மதிப்பு புதிய உச்சத்திற்கு சென்றுள்ளது.

Story first published: Tuesday, August 30, 2022, 16:27 [IST]
Other articles published on Aug 30, 2022
English summary
Hardik Pandya’s BRAND Endorsements ( ஹர்திக் பாண்ட்யாவின் விளம்பர மதிப்பு ) பாகிஸ்தான் அணியுடனான போட்டிக்கு பிறகு ஹர்திக் பாண்ட்யாவின் விளம்பர மதிப்பு புதிய உச்சிக்கு சென்றுள்ளது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+