ரொம்ப காமெடியா இருக்கே... ஹர்திக்கை கலாய்த்த பாலிவுட் நடிகை
மும்பை : தன்னுடைய பிட்னசில் மிகுந்த கவனம் செலுத்துபவர் இந்திய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. இதுகுறித்த வீடியோக்களையும் இவர் அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் இவர் ஹாப் வொர்க்அவுட் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, அதுகுறித்து தன்னுடைய சகோதரர் க்ருணால் பாண்டியாவிற்கும் சவால் விடுத்துள்ளார்.
இந்த வீடியோவிற்கு நடாஷா ஸ்டான்கோவிச் பாராட்டி எமோஜி வெளியிட்டுள்ளார். இதனிடையே, இரண்டு பாலிவுட் நடிகைகளும் கமெண்ட் செய்துள்ளனர்.

ஹர்திக் பாண்டியா கவனம்
தன்னுடைய பிட்னசில் கவனம் செலுத்தும் கிரிக்கெட் வீரர்களில் விராட் கோலியை அடுத்து அனைவரையும் கவர்ந்து வருபவர் ஹர்திக் பாண்டியா. இதுகுறித்து அவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். சமீபத்தில் தன்னுடைய குழந்தை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள ஹர்திக் பாண்டியா பிட்னசில் தொடர்ந்து அக்கறை செலுத்தி வருகிறார்.

ஹாப் வொர்க்-அவுட்
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாப் வொர்க் அவுட் செய்து அதன் வீடியோவை வெளியிட்டுள்ளார் ஹர்திக் பாண்டியா. ஸ்ட்ராங்காக இருந்தாலும் தொடர்ந்து அதை மேம்படுத்த தான் முயன்று வருவதாக தெரிவித்துள்ள ஹர்திக் பாண்டியா, இந்த வொர்க்-அவுட்டை செய்ய முடியுமா என்று தன்னுடைய சகோதரர் க்ருணால் பாண்டியாவிற்கும் சவால் விடுத்துள்ளார்.

காமெடியாக இருக்கிறது
இந்த வொர்க்-அவுட் வீடியோவிற்கு பைசெப்ஸ் எமோஜியை கமெண்ட் செய்துள்ளார் அவரது மனைவி நடாஷா ஸ்டான்கோவிச். இதனிடையே, பாலிவுட் நடிகை சையாமி கெர், மிகவும் காமெடியாக இருப்பதாக கமெண்ட் செய்துள்ளார். இதேபோல, இந்த வொர்க்அவுட்டிற்கு பாராட்டு தெரிவித்துள்ள நடிகை கரிஷ்மா தான்னா, இதை அவர் எப்படி செய்தார் என்று வியப்புடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
குழந்தைக்கு பொம்மை
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹர்திக் பாண்டியா மிகுந்த பரபரப்புடன் செயல்பட்டு வருகிறார். தன்னுடைய வொர்க்அவுட் வீடியோக்கள் மட்டுமின்றி, தன்னுடைய குடும்பத்தினருடன் கூடிய வீடியோக்களையும் அவர் பகிர்ந்து வருகிறார். கடந்த மாதத்தில் தன்னுடைய குழந்தை குறித்த அறிவிப்பை வெளியிட்ட பாண்டியா, தன்னுடைய குழந்தைக்கு தான் வாங்கிய பொம்மை குறித்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications